Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக உள்ளே .. காங். வெளியே.. மாற்ற முடியாத வரலாறு.. ராஜஸ்தானில் காங்கிரஸ் தோற்றது ஏன்?

Subscribe to Oneindia Tamil

ஜெய்பூர்: பாஜக இந்த முறை ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்கிறது. கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி வெற்றி பெறுவது பல ஆண்டுகாக தொடர்கிறது. பல ஆண்டுகளாக ராஜஸ்தானில் மாற்ற முடியாத வரலாறாக தொடர்கிறது.

கடந்த 2018-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பாஜக 73 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்தது. இந்நிலையில் 2023 தேர்தலில் அப்படியே மாறி உள்ளது.

 Rajasthan voters Stick To Revolving Door: BJP In, Congress Out: Why Congress lost in Rajasthan?

அதாவது தற்போது நடந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்றள்ளது 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் ஆட்சியமைக்க 101 இடங்கள் தேவை. இந்த முறை 199 தொகுதிகளுக்குத்தான் நவம்பர் 25ம் தேதி தேர்தல் நடந்தது. காங்கிரஸ் வேட்பாளர் இறந்து போனதால் ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை

199 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக வெற்றி மற்றும் முன்னிலை என 114 இடங்களில் வசப்படுத்தி உள்ளது. காங்கிரஸ் 70 இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலை வகிக்கிறது. பிஎஸ்பி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் 100 தொகுதிகளில் வென்ற போதிலும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்குமான வாக்கு வித்தியாசம் அரை சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருந்தது. காங்கிரஸ் நூலிழையில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததற்கு அசோக் கெலாட்டின் நீண்டகால அரசியல் அனுபவமும் ராஜதந்திரமும் முக்கியப் பங்கு வகித்தன.

முதலமைச்சராகும் கனவில் இருந்த இளம் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் 2020இல் 35 எம்எல்ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி ஆட்சியைக் கவிழ்க்க முயன்றார். அதை வெற்றிகரமாக முறியடித்தவர் கெலாட் ஆட்சியை காப்பாற்றினார். ஆனால் இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பாஜக பிரதானமாக முன் வைத்தது. முதலமைச்சரின் மகன் வைபவ் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் தோதஸ்ரா ஆகியோர் மீதான அமலாக்கத் துறை சோதனைகளளை உதாரணமாக சொல்லலாம். மேலும் காங்கிரஸ் அரசு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி நேரடியாகக் குற்றம் சாட்டி வந்தார்,

ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு இந்துக்களுக்கு எதிரானது; இஸ்லாமியர்களுக்கு ஆதரவானது என்னும் பிரச்சாரமும் முன்னெடுக்கப்படுகிறது. ராஜஸ்தானில் முக்கிய இந்து மத விழாக்கள் கல்வீச்சு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் இல்லாமல் நடப்பதில்லை என்றும் மோடி விமர்சித்து வந்தார். இஸ்லாமியர்கள் எம்எல்ஏக்களாக இருக்கும் தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் ஆட்சி மீது அதிருப்தி அடையாவிட்டாலும், உள்ளூர் எம்எல்ஏக்கள் இஸ்லாமியர்களின் நலன்களுக்கேமுன்னுரிமை அளிப்பதாக இந்து வாக்காளர்களை நம்ப வைக்கும் அளவிற்கு பாஜகவின் பிரச்சாரம் இருந்தது . மதரீதியிலான பிளவுகள் சில தொகுதிகளில் அதிகமாக இருந்தது. இதெல்லாம் பாஜகவிற்கு சாதமாக அமைந்தன.

இது தவிர பாஜக அளித்த வாக்குறுதிகள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தன. ஐந்தாண்டுகளுக்குள் 2.5 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள், உஜ்வலா திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ.450க்குச் சமையல் எரிவாயு சிலிண்டர், பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான உதவித்தொகை அதிகரிக்கப்படும் என்று பாஜக அறிவித்தது. கூடவே, கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தின்போது அறிவிக்கப்பட்ட இலவச உணவு தானியத் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாகப் பிரதமர் மோடி அறிவித்திருப்பது நல்ல பலனை ராஜஸ்தானில் பாஜகவிற்கு தந்தது.

மகளிரை கவரும் வகையில், 12ஆம் வகுப்பை நிறைவு செய்யும் பெண்களுக்கு இருசக்கர வாகனம், ஏழைக் குடும்பங்களின் பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான சேமிப்புப் பத்திரம், பெண்களுக்கான பிரத்யேக 'பிங்க்' பேருந்துகள், காவல் துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு, ஆசிரியர் பணியிடங்களில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை 50%ஆக அதிகரிப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளைப் பாஜக அளித்திருந்தது. இதெல்லாம் பாஜகவிற்கு சாதகமாக அமைந்தன.

இந்த தேர்தலில் பாஜக வெற்றிக்கும் காங்கிரஸ் தோல்விக்கும் முக்கிய காரணம் ஒன்றே ஒன்று தான். இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லாதது தான். இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் , சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளை அனுசரித்து காங்கிரஸ் போட்டியிட்டிருந்தால் தலையெழுத்து நிச்சயம் மாறி இருக்கும். ராஜஸ்தானில் மட்டுமல்ல.. மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரிலும் இதே நிலை தான். தெலுங்கானாவில் பாஜக தனியாக போட்டியிட்டது தான் கேசிஆர் கட்சி தோற்க காரணம்.. பாஜக ஒருவேளை கேசிஆரின் கட்சியுடன் இணைந்து செயல்பட்டிருந்தால் காங்கிரஸ் வெற்றி அங்குமே கடினமாகி இருந்திருக்கும். ராஜஸ்தானை பொறுத்தவரையில் காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. பல ஆண்டுகளாக ராஜஸ்தானில் மாற்ற முடியாத வரலாறாக உள்ளது.

முன்னதாக ராஜஸ்தானில் 1972 வரை காங்கிரஸின் கையே ஓங்கியிருந்தது. நெருக்கடிநிலைக்குப் பின்னர், 1977-ல் நடந்த தேர்தலில் ஜனதா கட்சி வென்று ஆட்சியமைத்தது. ஷெகாவத் முதல்வரானார். இந்திரா மீண்டும் பிரதமரானதும் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. 1989-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக - ஜனதா தளம் கூட்டணி 25 இடங்களிலும் வென்றது. சட்டமன்றத் தேர்தலில் 140 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. ஷெகாவத் மீண்டும் முதல்வரானார். ஆனால் இந்த காட்சி 1998ல் மாறியது. 1998-ல் மீண்டும் காங்கிரஸ் வென்றது 2003-ல் பாஜக வென்றது. 2008-ல் காங்கிரஸ் வென்றது. 2013-ல் பாஜக வென்றது. 2018-ல் மீண்டும் காங்கிரஸ் வென்றது. 2023 இல் மீண்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+