அக்பர் ஒரு 'ரேபிஸ்ட்'! அவரது பெயரை பயன்படுத்துவதே பாவமாம்.. ராஜஸ்தான் பாஜக அமைச்சர் சரமாரி விமர்சனம்
ஜெய்ப்பூர்: அக்பர் ஒரு பாலியல் வன்கொடுமையாளர் என்று ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளும் பாஜக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விமர்சித்திருக்கிறார். இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் சிங்கங்களுக்கு அக்பர், சீதா என பெயர் வைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்திருந்தது. இந்த சம்பவத்தில் முதன்மை தலைமை வனக்காவலரை திரிபுரா அரசு பணி இடைநீக்கமும் செய்திருந்தது. இந்நிலையில், இதனை தொடர்ந்து தற்போது மற்றொரு சர்ச்சை அக்பர் பெயரில் வெடித்திருக்கிறது. அதாவது, அக்பர் ஒரு பாலியல் வன்கொடுமையாளர் என்றும், அவர் பெயர் இந்தியாவில் பயன்படுத்துவதே பாவம் என்று ராஜஸ்தான் மாநிலத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

சமீபத்தில் அம்மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இந்நிலையில், தற்போது பள்ளி கல்வித்துறையானது பாடபுத்தகங்களில் சில மாற்றங்களை செய்து வருகிறது. இது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த கல்வித்துறை அமைச்சர் மதன் திலாவர், அக்பரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் பேசியதாவது, “நாங்கள் பள்ளியில் படிக்கும் போது, அக்பர் சிறந்தவர் என்று படித்தோம். நானும் அதையே படித்திருக்கிறேன், ஆனால் அவர் மீனா பஜார் அமைத்து அழகான பெண்களையும், சிறுமகளையும் கூட்டிச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். பாலியல் வன்கொடுமை செய்பவர் எப்படி சிறந்தவராக, உயர்ந்தவராக இருக்க முடியும்? அக்பரின் பெயரை இந்தியாவில் பயன்படுத்துவதே பாவம். அவர் ஒரு படையெடுப்பாளர். அவருக்கும் இந்திய மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற சர்ச்சைகளை மதன் திலாவர் எழுப்புவது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே, இந்து மாணவிகளை மதம் மாற்றியதாக கூறி ஆசிரியர்கள் இருவரை இவர் சஸ்பெண்ட் செய்திருக்கிறார். ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியில் மத மாற்றமும், லவ் ஜிகாத்தும் நடக்கிறது என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் தற்போது அக்பர் குறித்து குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.
இவரது கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர்ச்சியாக முகலாய மன்னர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் முன்வைக்கப்படுவது விவாதங்களை கிளப்பியுள்ளது.
-
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications