ராஜிவ் வழக்கு: 3 தமிழர் தூக்கு ரத்துக்கு மத்திய பா.ஜ.க. அரசும் எதிர்ப்பு! மறுசீராய்வு மனு தாக்கல்!!
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளவன், முருகன், சாந்தன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய பாரதிய ஜனதா அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனு மீது மத்திய அரசும், ஜனாதிபதியும் முடிவு எடுப்பதில் நீண்ட காலதாமதம் செய்ததை காரணம் காட்டி இவர்களின் தண்டனையை ஆயுளாக குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து இந்த 3 பேர் உட்பட ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்து நிறைவேற்றினார்.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையே மறுபரிசீலனை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. அப்போது தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம், நீதிபதிகள் ரஞ்ஜன் கோகய், எஸ்.கே.சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மத்திய அரசின் சீராய்வு மனுவை விசாரித்து கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியன்று தள்ளுபடி செய்தது.
அதன் பின்னர் மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது 7 தமிழர் விடுதலைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
அத்துடன் இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கும் மாற்றப்பட்டது. இந்த அரசியல் சாசன பெஞ்ச் கடந்த 15-ந் தேதியன்று விசாரணையைத் தொடங்கியது. அப்போது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த வழக்கில் தங்களது தரப்பு வாதத்தைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதனடிப்படையில் தமிழக அரசு 7 தமிழரையும் விடுதலை செய்தது சரியே என தமது தரப்பு வாதத்தை முன்வைத்தது. இந்நிலையில் இன்று 5 நீதிபதிகள் பெஞ்ச் முன்பாக மத்திய பாரதிய ஜனதா அரசு மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் 3 தமிழரின் தூக்கு ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது தவறு. 20 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டார்கள் என்பதை காரணம் காட்டி தூக்கு தண்டனையை ரத்து செய்துவிட முடியாது; அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என கூறப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications