ராஜீவ் கொலைச் சதி குறித்து விசாரிக்க கோரும் பேரறிவாளன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
ராஜீவ் காந்தி கொலைச் சதி குறித்து விசாரிக்க கோரும் பேரறிவாளன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள சதியை முழுமையாக விசாரிக்கக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகாலமாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க 3 மாத காலக் கெடு விதித்திருந்தது நேற்று உச்சநீதிமன்றம். இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் தாக்கல் செய்த மற்றொரு மனு மீது விசாரணை நடைபெற உள்ளது.

அதில், ராஜீவ் கொலைச் சதியின் பின்னணி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக் குழு இன்னமும் தமது விசாரணையை முடிவு செய்யவில்லை. இக்கொலையின் பின்னணியில் உள்ள சதி குறித்து விசாரிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
பேரறிவாளனின் இம்மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications