பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தமிழக அரசு முடிவு செய்தது.

இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்து இருந்தது.
அதில், சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்று வாதிட்டது. மேலும், குறிப்பிட்ட 7 பேரையும் விடுவிக்க மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்றும் மத்திய அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பிரபுல்லசீபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞற் ரஞ்சித்குமார், இதே அம்சங்களை வலியுறுத்தியதுடன், வழக்கு விசாரணையை 4 வார காலத்திற்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஒரு வாரம் வேண்டுமானால் ஒத்திவைக்கலாம் என்று தமிழக அரசின் வழக்கறிஞர் வாதாடினார்.
இதற்கு முருகன், சாந்தன் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். கைதிகள் 7 பேரும் 22 ஆண்டுகளாக சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர் வழக்கை நீடிக்காமல் உடனே பரிசீலிக்க வேண்டும் என்றார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications