இருதய கோளாறு: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மருத்துவமனையில் அனுமதி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இருதய கோளாறு காரணமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி அருகே குர்கானில் உள்ள மெடிசிட்டி மேதாந்தா என்ற தனியார் மருத்துவமனையில் இன்று காலை 9.15 மணிக்கு உள்துறை ராஜ்நாத்சிங் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருதய கோளாறு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவர் ஆர்.ஆர். காஷ்வினி தலைமையிலான குழுவினர் ராஜ்நாத்சிங்குக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ராஜ்நாத்சிங் உடல் நலம் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்று அம்மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ஏ.கே.துபே கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications