ரூபாய் நோட்டு வாபஸ்: அனைத்து கட்சி தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை
ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது குறித்து எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த உள்ளார்
டெல்லி: 500,1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது தொடர்பாக இன்று காலை அனைத்து கட்சி தலைவர்களுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த உள்ளார்.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பையும் அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கைகளையும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து 12 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றம் எதிரில் உள்ள காந்தி சிலையின் முன் வரிசையாக அணிவகுத்து நின்று நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 200 எம்பிக்கள் கலந்து கொண்டனர்.மேலும், எதிர்க்கட்சிகள் சார்பில் 28-ம் தேதி நாடுதழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இன்று காலை 10 மணியளவில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்களவை, மாநிலங்களவை அலுவலக நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதால் மத்திய அரசு இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications