For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தலில் தோல்வி: தான் துவங்கிய கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு தாவும் நடிகை ராக்கி

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த நடிகை ராக்கி சாவந்த் தான் துவங்கிய ராஷ்ட்ரிய ஆம் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் ராஷ்ட்ரிய ஆம் கட்சியை துவங்கி நாடாளுமன்ற தேர்தலில் வட மேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டார்.

பச்சை மிளகாய் சின்னத்தில் போட்டியிட்ட ராக்கி தோல்வி அடைந்தார். இது குறித்து அவர் கூறுகையில்,

விலகல்

விலகல்

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு நான் துவங்கிய ராஷ்ட்ரிய ஆம் கட்சியில் இருந்து விலகிவிட்டேன். நான் சேரிக்கு கூட சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தேன். ஆனால் எனக்கு மொத்தமே 1, 995 வாக்குகள் தான் கிடைத்துள்ளன.

பாஜக

பாஜக

மக்கள் பழமையான கட்சிகளுக்கு தான் வாக்களிப்பார்கள் போன்று. அப்படி பார்த்தாலும் இந்தியாவின் பழமையான கட்சி இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. தற்போது நான் பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளேன்.

தேர்தல்

தேர்தல்

நான் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன். பாஜகவின் நலனுக்காக பாடுபடப் போகிறேன்.

உடை

உடை

தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது நான் அணிந்திருந்த பச்சை மிளகாய் உடைகளை ஏலத்தில் விடலாம் என்று நினைக்கிறேன் என்றார்.

கட்சி நிலைமை

கட்சி நிலைமை

ராஷ்ட்ரிய ஆம் கட்சியை துவங்கிய ராக்கியே அதில் இருந்து விலகிவிட்டார். அப்படி என்றால் கட்சி இனி என்னவாகும் என்று தெரியவில்லை.

English summary
Actress Rakhi Sawant after losing the lok sabha election has resigned from the Rashtriya Aam party which she founded. She has planned to join BJP now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X