ராமர் கோவில் கட்டியாச்சு! பாபர் மசூதிக்கு பதில்.. அயோத்தியில் கட்டப்படும் மசூதி நிலை என்ன? விபரம்

Subscribe to Oneindia Tamil

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பாபர் மசூதிக்கு பதில் தானிப்பூரில் மசூதி கட்டும் திட்டம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 2.7 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக மாறியது. இந்த இடம் தொடர்பான பிரச்சனை 500 ஆண்டுகளாக நடந்து வந்தது. போராட்டம், வன்முறையை தொடர்ந்து நீண்டகால சட்ட போராட்டம் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

Ram temple inauguration: What are the situation of Dhannipur mosque which build replace of Babri Masjid

அதாவது கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என தீர்ப்பு வழங்கியது. அதன்பிறகு 2020ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கோவில் கட்டும் பணி தொடங்கியது.

தற்போது கோவிலில் முதல் தள கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. பிரதமர் கோவில் கருவறையில் இருக்கும் பால ராமர் சிலைக்கு சடங்குகள் செய்தார். கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் நேற்று முதல் தரிசனம் செய்து வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று ராமரை தரிசித்து வருகின்றனர்.

அயோத்தி போல்.. ஞானவாபி மசூதியை இந்துக்களிடம் ஒப்படைக்கனும் - மாஜி தொல்லியல் நிபுணர் கேகே முகமது

இதற்கிடையே தான் தற்போது அனைவருக்கும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்போது இன்னொரு முக்கிய உத்தரவையும் பிறப்பித்தது. அதாவது பாபர் மசூதிக்கு பதில் புதிய மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என தெரிவித்தது.

இதையடுத்து உத்தர பிரதேச அரசு சார்பில் அயோத்தி ராமர் கோவிலில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் தானிப்பூரில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் புதிதாக மசூதி கட்டும் பணி என்பது இன்னும் தொடங்கப்படவில்லை. தீர்ப்பு வந்து 5 ஆண்டு ஆகும் நிலையில் மசூதி கட்டுமான பணி தொடங்காத நிலை இருக்கிறது.

‛உயிருடன் இருக்க முடியாதே’.. மோடி 11 நாள் விரதம் இருந்தாரா? டாக்டர் உரையாடலால் வீரப்ப மொய்லி டவுட்

நிதிப்பற்றாக்குறை மற்றும் நிர்வாகம் சார்ந்த பிரச்சனைகள் தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் முதலில் மசூதி இந்தியாவில் இருக்கும் மசூதியை போல் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பது போன்று கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மசூதியுடன் மருத்துவமனை, நூலகம் உள்ளிட்ட கட்டமைப்புகளையும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மற்றும் கட்டுமான பணிகள் இந்தோ-இஸ்லாமிக் கலாசார அறக்கட்டளை கண்காணிப்பில் நடைபெற உள்ளது. இதற்கான வரைபடங்கள் அயோத்தி மாநகர வளர்ச்சி ஆணையத்தின் அனுமதிக்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க ராமர் கோவில் இயக்கம் போன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இயக்கத்தை தொடங்கி நன்கொடை வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+