‛உயிருடன் இருக்க முடியாதே’.. மோடி 11 நாள் விரதம் இருந்தாரா? டாக்டர் உரையாடலால் வீரப்ப மொய்லி டவுட்
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதமிருந்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தினார். இந்நிலையில் தான் 11 நாட்கள் விரதமிருந்தால் மனிதனால் உயிருடன் இருக்க முடியாது என டாக்டர் கூறியதாக தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து தெரிவித்து சந்தேகம் கிளப்பி உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் 2019ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டதோடு, பிரதமர் மோடி 2020ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.

அதன்பிறகு கோவில் கட்டும் பணி என்பது விறுவிறுப்பாக நடந்தது. நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்து முடிந்தது. கோவிலில் நிறுவப்பட்ட 5 வயது பால ராமர் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை சடங்குகளை செய்தார். இப்படியாக கும்பாபிஷேகம் நிறைவு பெற்றது. நேற்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முன்னதாக பிரதமர் மோடி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்காக கடந்த 12ம் தேதி விரதத்தை தொடங்கினார். 11 நாட்கள் அவர் விரதம் கடைப்பிடித்தார். மேலும் ராமாயணத்துடன் தொடர்புடைய கோவில்களுக்கு அவர் சென்று வழிபாடு செய்தார். கேரளா, ஆந்திரா, தமிழ்நாட்டில் அவர் சுற்றுப்பயணம் செய்து சிறப்பு தரிசனம் செய்தார்.
‛ராமர் கோவில் கட்டும்போது தான் அயோத்தி வருவேன்’.. 32 ஆண்டு சபதத்தில் வென்ற பிரதமர் மோடி! பின்னணி
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில், ராமநாதபுரம் ராமநாத சுவாமி கோவில், ராமேஸ்வரம் கோதண்டராம கோவில்களில் தரிசனம் செய்தார். ராமர் பாலத்தின் தொடக்க இடமாக கருதப்படும் அரிச்சல் முனை கடற்கரையில் மலர்தூவி பிரதமர் மோடி வணங்கினார். அதன்பிறகு தான் நேற்று முன்தினம் மோடி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றார். கும்பாபிஷேக முடிவில் பிரதமர் மோடி 11 நாள் விரதத்தை கைவிட்டார். ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் வழங்கிய பிரசாதத்தை ஏற்று பிரதமர் மோடி விரதத்தை முடித்தார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் கடைப்பிடித்தாரா? என்பது பற்றி காங்கிரஸ் கட்சி சந்தேகம் கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி கூறுகையில், ‛‛நான் காலையில் டாக்டர் ஒருவருடன் நடைப்பயிற்சி சென்றேன். அப்போது ஒரு மனிதன் 11 நாட்கள் விரதம் இருக்கும்போது உயிருடன் இருக்க முடியாது என கூறினார். அவர் (பிரதமர்) உயிருடன் இருக்கிறார் என்றால் அது அதிசயமான ஒரு செயலா?. இதனால் அவர் விரதம் மேற்கொண்டாரா? என்ற சந்தேகம் எனக்கு வருகிறது.
‛‛எனக்கு அந்த பிரசாதம் தான் வேணும்’’.. 11 நாள் விரதம் முடிக்க பிரதமர் மோடி கேட்டது என்ன? சுவாரசியம்
ஒருவேளை பிரதமர் மோடி விரதம் கடைப்பிடிக்காமல் கருவறை சென்றால் அது புனிதமற்ற இடமாக மாறிவிடும். அந்த இடத்தில் இருந்து நேர்மறை ஆற்றல் என்பது உருவாகாது’’ என கூறியுள்ளார். வீரப்ப மொய்லியின் இந்த கருத்துக்கு பாஜக எம்பி லஹார் சிங் சிரோயா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு அவர் வீரப்ப மொய்லியை விமர்சனம் செய்துள்ளார்.
இதுபற்றி அவர், ‛‛ஒரு சிறந்த எழுத்தாளர் என்ற முகமூடியில் வீரப்ப மெய்லி சுற்றி திரிகிறார். அவரை போன்றே எல்லோரும் போலியானவர்கள் என நினைக்கிறார். ஆனால் உண்மை என்ன என்பது நாட்டுக்கு தெரியும். கடவுள் ராமர் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றால் நீங்கள் விரதமிருந்து உயிர் வாழ முடியும். இதன்மூலம் காந்தி (சோனியா காந்தி குடும்பம்) குடும்பத்திற்கு மகிழ்ச்சி ஏற்படுத்த வீரப்ப மொய்லி முயன்றுள்ளார். இருப்பினும் வரும் தேர்தலில் வீரப்ப மொய்லிக்கு சிக்பள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு காங்கிரசிடமிருந்து சீட் கிடைக்காது’’ என விமர்சித்துள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications