ராகுல், தலித்துகளுக்கு எதிரான பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் பாபா ராம்தேவ்
டெல்லி: தேனிலவுக்குச் செல்வது போல் தலித்துகளின் வீடுகளுக்கு ராகுல் காந்தி செல்வதாக தாம் தெரிவித்த கருத்துக்கு யோகா குரு பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரியுள்ளார்.

லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலித்துகளின் வீடுகளுக்கு ஏதோ சுற்றுலா மற்றும் தேனிலவுக்கு செல்வது போல் சென்று வருகிறார் என்று பேசியிருந்தார்.
இந்த பேச்சு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ராகுலை விமர்சிக்கிறேன் பேர்வழி என தலித்துகளைம் மிக இழிவாக பேசியது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மகளிர் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து லக்னோ போலீசார் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ராம்தேவ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தலித் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் என் கருத்துகள் இருப்பின் அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications