பதான் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு ஆதாரங்கள் இல்லை: சிபிஐ
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று சி.பி.ஐ. தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் காணாமல் போன 14 வயது மற்றும் 16 வயது சகோதரிகள் அப்பகுதியில் உள்ள மாமரத்தில் பிணமாக தொங்கினர். அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
அந்த சிறுமிகளை கண்டுபிடிக்க போலீசார் உதவி செய்யவில்லை என்றும் குற்றவாளிகள் உயர்சாதியினர் என்பதால் அவர்களை பாதுகாப்பதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

பலாத்காரமே- உள்ளூர் மருத்துவர்
சிறுமிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த உள்ளூர் மருத்துவர் தமது அறிக்கையில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் உயிருடன் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளனர் என்று கூறியிருந்தார். அதன்படி போலீசார் தீவிர விசாரணை நடத்தி 2 போலீஸ்காரர்கள் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

கவுரவக் கொலை?
இது கவுரவக் கொலையாக இருக்கலாம் என்று உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

சிபிஐ விசாரணை
ஒரு மாதத்திற்குப் பின் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. 2 மாத காலம் விசாரணை நடத்திய சி.பி.ஐ., இந்த வழக்கில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று கூறுகிறது.

உண்மை கண்டறியும் சோதனை
குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் சமீபத்தில் சி.பி.ஐ. உண்மை கண்டறியும் சோதனை நடத்தியது. இதில், அவர்கள் குற்றமற்றவர்கள் என தெரியவந்துள்ளது. இதேபோல், சிறுமிகளின் பெற்றோரிடம் நடத்திய சோதனையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதில்களை தெரிவித்தனர்.

ஜாமீனுக்கு எதிர்ப்பு இல்லை
எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று சி.பி.ஐ. கூறுகிறது.

வேறு கோணத்தில் விசாரணை
அதேசமயம் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்களா என்பதை முதலில் உறுதி செய்து, அதன்பின்னர் கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் இறங்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications