17 வயது சிறுவனை பலாத்காரம் செய்த தொழிலதிபர் மனைவி.. வேளாங்கன்னி லாட்ஜில் பிடிபட்ட ஜோடி
Recommended Video

பெங்களூர்: 17 வயது சிறுவனை பலாத்காரம் செய்ததாக 24 வயது குடும்ப தலைவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது பெங்களூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியை சேர்ந்தவர் 24 வயது பெண்மணி எலிசா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் வாட்டர் சப்ளை பிசினஸ் செய்து வருகிறார். இருவருக்கும் 2 வருடங்கள் முன்பு திருமணமானது.
தம்பதிகளுக்கு இன்னும் குழந்தை இல்லை. இந்த நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி முதல் திடீரென அந்த பெண் மாயமாகிவிட்டார்.

போலீசில் புகார்
இதுகுறித்து ராபர்ட்சன்பேட்டை காவல் நிலையத்தில் எலிசா கணவன் புகார் அளித்தார். மனைவி போட்டோவையும் போலீசாரிடம் கொடுத்திருந்தார். போலீசார் விசாரணையை ஆரம்பித்திருந்த நிலையில், மற்றொரு திருப்பம் ஏற்பட்டது.

சிறுவன் தந்தை
எலிசா வீட்டு ஏரியாவை சேர்ந்த 17 வயது சிறுவனை 24ம் தேதி முதல், காணவில்லை என அவரது தந்தை ராபர்ட்சன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார். அப்போது போலீசாரின் டேபிளில் எலிசாவின் போட்டோ இருப்பதை பார்த்த அவர் என்ன நடந்தது என விசாரித்துள்ளார். போலீசார் எலிசாவை காணவில்லை என என கூறியுள்ளனர்.

ஓடிப்போன ஜோடி
அப்போது சிறுவனின் தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏற்கனவே எலிசா தனது மகனுடன் நெருக்கம் காட்டுவதாக சிலர் கூறி அவர் கேள்விப்பட்டிருந்தார். அதை போலீசாரிடம் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவத்தன்று தங்கவயல் பஸ் நிலையத்தின் அருகே இருந்த சிசிடிவிகளை சோதித்து பார்த்தனர். அப்போது ஆந்திரா செல்லும் பஸ்சில் சிறுவனும், எலிசாவும் போனது தெரியவந்தது.

லாட்ஜில் பிடிபட்டனர்
போலீசார் இருவரையும் வலை வீசி தேடி வந்த நிலையில், தமிழகத்தின் வேளாங்கன்னி நகரிலுள்ள ஒரு லாட்ஜில் இருவரும் இருப்பது தெரியவந்தது. போலீசார் அந்த பெண்ணை கைது செய்து சிறுவர்களை பாலியல் சீண்டலில் இருந்து பாதுகாக்கும் 'போஸ்கோ' சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுவன் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 17 வயதுடைய நபர் என்பதால் எலிசா மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனை
முன்னதாக, மருத்துவமனையில் இருவருக்கும் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், எலிசாவும், அந்த சிறுவனும் உடல் ரீதியாக உறவு வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, இதை பலாத்காரம் என சொல்வதை ஏற்க எலிசா மறுத்து வருகிறார். தாங்கள் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் அவர் கூறிவருகிறாராம். இதென்னடா கொடுமை!
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications