வாட்ஸ் அப்பில் பரவிய பலாத்கார வீடியோ- அவமானத்தில் 3 குழந்தைகளின் தாய் தற்கொலை
முஸாபர்நகர்: உத்திரப்பிரதேசத்தில் தனது பலாத்கார வீடியோ வாட்ஸ் அப்பில் பரவியதால் மனமுடைந்த 3 குழந்தைகளின் தாயான 40 வயது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் முஸாபர்நகர் பகுதியைச் சேர்ந்த சுகாதார ஆர்வலராக பணியாற்றி வந்த 40 வயது பெண் ஒருவர், கடந்த ஞாயிறன்று தனது வீட்டில் அருகில் வைத்து 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அந்த வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியானது. இது தொடர்பாக தகவல் அறிந்த அப்பெண் அவமானத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக புகார் பதிவு எய்த போலீசார், ஒருவரைக் கைது செய்துள்ளனர். மீதமுள்ள 3 பேரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட பெண்ணிற்கு 3 குழந்தைகள் உள்ளன. எனவே, அக்குழந்தைகளுக்கு உரிய நிதியுதவியைத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications