கத்தி முனையில் தொடர் பலாத்காரம்: கட்டாயப்படுத்தி கலைக்கப்பட்ட கருவுடன் புகார் அளித்த சிறுமி
கத்தி முனையில் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு கட்டாயப்படுத்தி கருக்கலைக்கப்பட்டதை அடுத்து அந்த கருவுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Recommended Video

போபால்: மத்திய பிரதேசத்தில் தலித் சிறுமி ஒருவர் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டு கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததை அடுத்து அந்த கருவை பையில் கொண்டு வந்து காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் ,சாத்னா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரை நீரஜ் பாண்டே மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சிறுமியை கத்தி முனையில் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னரும் அந்த சிறுமியை விடாமல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போதிலும் அந்த புகாரின் பேரில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

கர்ப்பிணி
அந்த சிறுமிக்கு வயிற்று பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டதை அடுத்து அவர் கர்ப்பிணியாக இருப்பதை உணர்ந்தார். எனினும் அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை.

மருத்துவரிடம்
இந்நிலையில் நேற்றைய தினம் அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதால் ஆட்டோவில் தனது தாயுடன் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அங்கு வழிமறித்த நீரஜ் பாண்டே மற்றும் நண்பர்கள் அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.

கால்வாய் வீசிவிடு
அங்கு அவருக்கு கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டது. பின்னர் கலைக்கப்பட்ட கருவை ஒரு பையில் போட்டு ஆட்டோவுக்கும் ரூ. 20-ஐ கொடுத்த மருத்துவர், கருவை கால்வாயில் வீசிவிட்டு செல்லுமாறு கூறி விரட்டிவிட்டனராம்.

ம.பி.யில் உலுக்கிய சம்பவம்
மேலும் இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அந்த பெண் மருத்துவர் சிறுமியை மிரட்டியுள்ளார். இதையடுத்து சாத்னாவில் உள்ள காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பையில் போட்டுக் கொடுக்கப்பட்ட கருவுடன் சென்று புகார் அளித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications