ஹைதராபாத்: ரேவ் பார்ட்டியில் கவர்ச்சி ஆட்டம் போட்ட 30 பேர் கைது
ஹைதராபாத்: ஹைதரபாத்தில் உள்ள கெஸ்ட் ஹவுசில் ரேவ் பார்ட்டியில் பங்கேற்று கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்றைய இளைஞர்களிடையே ரேவ் பார்ட்டி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதிர வைக்கும் இசை, லேசாக மிளிரும் லேசர் விளக்கு, உயர்தர மது மற்றும் சட்டவிரோத போதைப் பொருட்களுடன் ஆரவார காட்சிகள் அரங்கேறும் கச்சேரிதான் `ரேவ் பார்ட்டி'. ஆண்களும், பெண்களும் பேதமில்லாமல் இப்படி ஆடிப்பாடி கும்மாளமடிப்பது இளவட்டங்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.

3 ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இவ்வளவு பணம் செலவழித்து இளசுகள் இந்த ரேவ் பார்ட்டியில் மயங்கிக் கிடப்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. இங்கு கிடைக்கும் வசதிகளோ ஏராளம், எதை எதை எல்லாம் `அனுபவிக்கிறார்களோ' அதற்கு தக்கபடி கூடுதல் கட்டணமும் உண்டு என்கின்றனர். போதைக்கு ஆசிட் ஊசிகளும் இங்கு பயன்படுத்துவது உண்டாம்.
எனவேதான் ஹைதராபாத் நகரில் கெஸ்ட் ஹவுஸ்களில் அடிக்கடி காவல்துறையினர் அடிக்கடி சோதனை மேற்கொள்கின்றனர். அவ்வப்போது ஏராளமானோர் கைது செய்யப்பட்டாலும் ரேவ் பார்ட்டிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
செவ்வாய்கிழமையன்று மொய்னாபாத் பகுதியில் நடைபெற்ற ஆபரேசனில் 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 22 ஆண்கள் 8 பெண்களை கைது செய்த போலீசார் 5 கார்கள், 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் மது பாட்டில்கள், இசைக்கருவிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
பெண்களும், ஆண்களும் மும்பையிலிருந்து வந்து பார்ட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்த ரேவ் பார்ட்டியின் ஒருங்கிணைப்பாளர் திலீப் ஜெயின் என்பவரை கைது செய்த போலீசார், அவர் மீது கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications