விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரிலீஸ்... இன்று முதல் மஞ்சள் நிறத்தில் புதிய 200 ரூபாய் நோட்டு!
மும்பை: இன்று முதல் நாடு முழுவதும் புதிய 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வருகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு, புதிதாக 500, 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து 50, 100 ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சிட்டு ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது. இதன் ஒரு பகுதியாக புதிய 200 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்தது.
இதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்நிலையில் புதிய 200 ரூபாய் நோட்டுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது.
முதன் முறையாக வெளியிடப்பட உள்ள 200 ரூபாய் நோட்டு பளிச்சென்ற மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கையெழுத்துடன் வெளியாக இருக்கும் இந்த நோட்டின் முன்பக்கத்தில் நடுவே மகாத்மா காந்தி படம் இடம் பெற்று உள்ளது. இடது புறத்தில் 200 என்ற எண் தேவநாகரி எழுத்தில் இருக்கிறது.
வலது புறத்தில் அசோக சின்னமும், 'எச்' என்ற எழுத்தும், 200 என்ற எண் பச்சை மற்றும் நீல நிறத்தில் மாறும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளது.
நோட்டின் பின்பக்கத்தில் சாஞ்சி ஸ்தூபி படம் உள்ளது. மேலும் தூய்மை இந்தியா இலச்சினை மற்றும் வாசகமும், தமிழ் உள்பட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் 200 ரூபாய் என்ற எழுத்தும் இடம் பெற்றுள்ளன.
RBI to issue Rs 200 notes: All you need to know#infographics pic.twitter.com/h34gDZgITY
— Oneindia Tamil (@thatsTamil) August 25, 2017
நேற்றுதான் புதிய 50 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் எப்போது...?
இந்தியா முழுவதும் இந்த புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தாலும், தமிழகத்தில் எப்போது மக்கள் கைகளுக்கு இந்த புதிய நோட்டுகள் கிடைக்கும் என்பதில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications