For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அஸ்ஸாம் கோவிலுக்குள் ராகுல் காந்தி போகாததற்கு இதுதான் காரணமாமே...

By Mathi
Google Oneindia Tamil News

குவஹாத்தி: அஸ்ஸாமில் சர்ச்சைக்குரிய கோயிலுக்குள் செல்வதற்கு முன்னதாக குளித்துவிட்டு வேட்டி கட்டிக் கொண்டு போக வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்ற விரும்பாததாலேயே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கோவிலுக்குள் போகவில்லை என்கிற தகவலை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தாம் அஸ்ஸாமுக்கு சென்றபோது பார்பேட்டாவில் உள்ள வைணவ கோயிலுக்குள் செல்லவிடாமல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் தடுத்துவிட்டனர் என குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் ராகுலின் இந்த குற்றச்சாட்டை பார்பேட்டா கோவில் நிர்வாகம் மறுத்திருந்தது.

Reason for Rahul Gandhi skipped Assam temple..

அத்துடன் கோவிலில் ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்ட் யாரும் இல்லை எனவும் கோவில் தலைவர் சர்மா கூறியிருந்தார். இதனிடையே ராகுலின் கோவில் பஞ்சாயத்தில் ஒரு சுவாரசிய தகவலை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அதாவது பார்பேட்டா கோவிலுக்கு செல்வோர் அங்கு போய் குளித்துவிட்டு வேட்டி கட்டிக் கொண்டுதான் செல்ல வேண்டுமாம்; இதுதான் நடைமுறையாம்... இதை பின்பற்ற ராகுல் காந்தி விரும்பவில்லையாம்.. அதனால் அவர் கோவிலுக்குள் செல்லவில்லை என்கின்றன அந்த ஊடகங்கள்.

குளிக்க, வேட்டி கட்ட பயந்துகிட்டுதான் இத்தனை ரகளையா?

English summary
According to a report published in Assam Medias, Rahul Gandhi didn't go to temple because he didn't want to violate the customs of taking a bath, wearing dhoti and then going in.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X