இங்கிட்டு 'கங்கி ரெட்டி'... அங்கிட்டு 'ஷாகு பாய்' செம்மரக் கடத்தலில் கோலோச்சிய மாஃபியாக்கள்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை/ ஹைதராபாத்: செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவனாக இருந்த கங்கி ரெட்டியை மொரீசியஸ் சிறையில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அமலாக்கப் பிரிவு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே 20 அப்பாவித் தமிழர்களை செம்மரங்கள் வெட்டியதாகக் கூறி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து செம்மரக் கடத்தல் கும்பல் தலைவன்களைப் பிடிக்காமல் அப்பாவி தொழிலாளர்களை சுட்டுப் படுகொலை செய்வது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செம்மரக் கடத்தல் கும்பலைக் கைது செய்கிறோம் என கூறி ஏராளமான கைது நடவடிக்கைகளை ஆந்திரா அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மொரீசியஸ் சிறையில் இருக்கும் செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவன் கடப்பா கங்கி ரெட்டியை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன...

கங்கி ரெட்டி.. ஷாகு பாய்..

கங்கி ரெட்டி.. ஷாகு பாய்..

செம்மரக் கடத்தலைப் பொறுத்தவரையில் இருவர்தான் கேங் லீடர்கள்.. ஒருவன் கங்கி ரெட்டி.. மற்றொருவன் ஷாகு பாய்...

'ஆந்திரா' ஏரியா கங்கிரெட்டிக்கு... 'தமிழகம்' ஏரியா ஷாகு பாய்க்கு என பார்டர் பிரித்துக் கொண்டுதான் செம்மரக் கடத்தல் தொழிலில் கொடிகட்டிப் பறந்திருக்கிறார்கள் இருவரும்.... இவர்கள் இருவரும்தான் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்குக் கடத்தியிருக்கின்றனர்....

நடிகர் முதல் நக்சலைட்டுகள் வரை..

நடிகர் முதல் நக்சலைட்டுகள் வரை..

இவர்கள் இருவருமே நடிகர்கள், நடிகைகள், நக்சலைட்டுகள்... என பல்வேறு தரப்பினரையும் செம்மரக் கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்தியிருக்கின்றனர்.. ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு முன்னர் பதவி வகித்த காலத்தில் இந்த செம்மரக் கடத்தல் தொழிலுக்கு பயங்கர நெருக்கடி ஏற்பட்டது..

அதனால்தான் திருப்பதி அருகே நக்சலைட்டுகள் உதவியுடன் சந்திரபாபு நாயுடு சென்ற வாகனத்தை கண்ணிவெடி மூலம் தகர்த்தனர்.. இந்த சதிச் செயலை முழுவதும் அரங்கேற்றியவன் கங்கிரெட்டிதான்.. இதனால் தற்போதும் கங்கிரெட்டி மற்றும் சந்தன மரக் கடத்தல் கும்பல் மீது வன்மத்தோடு நாயுடு இருக்கிறார் என்கின்றனர் ஆந்திரா போலீசார்...

ஷாகுபாய்..

ஷாகுபாய்..

ஷாகுபாயைப் பொறுத்தவரையில் அவரது ஆப்பரேட்டிங் ஏரியா சென்னைதான்.. ஆந்திராவில் வெட்டப்படும் சந்தனமரங்கள் சென்னைக்கு பாதுகாப்பாக கொண்டு வருவதும் அவற்றை கடல் மார்க்கமாக மொரீசியஸ் மற்றும் இலங்கைக்கு கடத்துவதும் ஷாகுபாய் வேலை...

நடிகை, நடிகர்களுக்கு 10% கமிஷன்

நடிகை, நடிகர்களுக்கு 10% கமிஷன்

வெளிநாட்டில் உள்ள செம்மரக் கடத்தல் கும்பலிடம் இருந்து பணத்தைப் பெற்று வரும் வேலைகளில் பெரும்பாலும் நடிகர், நடிகைகள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.. ஏனெனில் இவர்கள் பெரும்பாலும் விமான நிலையங்களில் சோதனையிடப்படுவதில்லை..

அத்துடன் இப்படி பணத்தைக் கொண்டு வரும் நடிகர், நடிகைகளுக்கு கமிஷனாக 10% வழங்கப்படுகிறது.. இந்த 10% கமிஷனை கனகச்சிதமாக ஷாகுபாய் கொடுத்துக் கொண்டிருந்ததால் நான்..நீ.. என ஆள் ஆளுக்குப் போட்டி போட்டுக் கொண்டு திரைபிரபலங்கள் செம்மரக் கடத்தல் ஜோதியில் ஐக்கியமாகி இருக்கின்றன..

அமலாக்கப் பிரிவு..

அமலாக்கப் பிரிவு..

இந்நிலையில் அமலாக்கப் பிரிவும் தற்போது கோதாவில் குதித்திருக்கிறது.. கங்கி ரெட்டி மூலமான ஒவ்வொரு பரிவரத்தனை குறித்தும் மிகத் தீவிரமான விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

நாடு கடத்தலுக்கு தீவிரம்..

நாடு கடத்தலுக்கு தீவிரம்..

இதற்காக கங்கிரெட்டியை மொரீசியஸ் நாட்டில் இருந்து நாடு கடத்திக் கொண்டு வருவதற்கான நடைமுறைகளையும் அமலாக்கப் பிரிவு தொடங்கியுள்ளது... ஆந்திராவில் செம்மரக் கடத்தல் வழக்கில் ஜாமீனில் வந்த கங்கி ரெட்டி எஸ்கேப்பாகி துபாய் வழியாக மொரீசியஸ் போனவன்.. இதனால் ரெட் கார்னர் நோட்டீசை இண்டர்போல் வெளியிட்டது.. இதனடிப்படையில் மொரீசியஸ் போலீசில் பிடிபட்டு சிறையில் இருக்கிறான்...

பிரபலங்களும் கண்காணிப்பில்

பிரபலங்களும் கண்காணிப்பில்

அதேபோல் செம்மரக் கடத்தலில் தொடர்புடைய தமிழக, ஆந்திரா முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகளையும் தங்களது வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது அமலாக்கப் பிரிவு..

ஆந்திரா காவல்துறை, சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு ஆகியவை மூன்றும் இணைந்து கங்கி ரெட்டியை இந்தியா கொண்டுவருவதில் மும்முரமாக இருக்கின்றன.. கங்கி ரெட்டி இந்தியா கொண்டு வரும்போது செம்மரக் கடத்தலில் புதைந்து கிடக்கும் பல மர்மங்கள் வெளியே வரும் என்கின்றனர் காவல்துறை வட்டாரங்கள்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+