மாங்காய் மூட்டைக்குள் பதுக்கி செம்மரம் பலே கடத்தல்… போலீசாரின் அதிரடி சோதனையில் பறிமுதல்: வீடியோ
மாங்காய் மூட்டைக்குள் வைத்து செம்மரம் கடத்தப்பட்டது. போலீசாரின் அதிரடி சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பதி: மாங்காவோடு மாங்காவா செம்மரங்கள் மூட்டைக்குள் கட்டப்பட்டு கடத்தப்படுவதை போலீசாரின் அதிரடி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பதி அரிதா காலணியில் செம்மர கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்தப் பக்கம் அடிக்கடி செம்மரம் கடத்தப்படுவது வாடிக்கை என்பதால் அங்கு போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப் பக்கமாக வந்த டெம்போ லாரி ஒன்றை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அந்த வாகனத்தில், மாங்காய் மூட்டைக்குள் செம்மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டு கடத்தப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தப்பட்ட செம்மரத்தின் மதிப்பு 50 லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வாகனத்தை சோதனை செய்யும் போதே இந்த வாகனத்தில் வந்தவர்கள் அனைவரும் தப்பியோடிவிட்டனர். இதனால் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications