ஜெகஜால டீச்சர்கள்.. இப்படியெல்லாம் கூடவா நடக்கும்?.. சிக்கிய 15 பேர்.. செருப்பில் ப்ளூடூத்.. ஷாக்

செருப்பில் ப்ளூடூத் பொருத்தி மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைதாகி உள்ளனர்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வருவது போலவே, ஒரு நூதன மோசடி ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.. இதில் 5 ஆசிரியர்கள் சிக்கி உள்ளனர்.

Rajasthan Eligibility Exam for Teachers... இதுதான் ரீட் என்பதன் விரிவாக்கம்.. ராஜஸ்தான் மாநில மாநில உயர்கல்வித் துறையால், ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு தான் "ரீட்".

இந்த தேர்வு நேற்று அங்கு நடந்து முடிந்தது.. மொத்தம் 33 மாவட்டங்களில், 3993 மையங்களில் இந்த தேர்வு 2 ஷிப்ட்களில் நடைபெற்றது.. மொத்தம் 16.51 லட்சம் பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர்.

 பாதுகாப்பு

பாதுகாப்பு

அதனால், தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. தேர்வு மையங்கள் முழு நேரமாக கண்காணிக்கப்பட்டே இருந்தன.. ஆனாலும் ஒரு மோசடி நடந்துள்ளது. இப்படித்தான் பிகானர் என்ற மாவட்டத்திலும் தேர்வு நடந்து கொண்டிருந்தது.. அப்போது தேர்வு எழுதிய 5 பேர், தங்களுடைய செருப்பில் ப்ளூடூத்தை பொருத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளது அம்பலமானது.

 ப்ளூடூத்

ப்ளூடூத்

அது ஸ்பெஷலான செருப்பு.. இதற்காகவே வடிவமைக்கப்பட்டது.. ஒரு செருப்பின் விலை 6 லட்சம் ரூபாயாம்.. ப்ளூடூத்தை அதில் பொருத்தி வடிமைக்கப்படும்.. இப்படி 25 பேர்களுக்கு ப்ளூடூத் செருப்பை விற்பனை செய்துள்ளனர்.. அந்த செருப்பை அணிந்துகொண்டுதான் தேர்வு எழுத நேற்று வந்துள்ளனர்.. ஆனால், செருப்பை பார்த்ததுமே வித்தியாசமாக இருந்ததால், சம்பந்தப்பட்டவர்களை சோதனை செய்தனர்..

தேர்வு

தேர்வு

குட்டு வெளிப்பட்டதையடுத்து, தேர்வுக்கு முன்பே அவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுவிட்டனர். இவர்கள் இப்படி செருப்பை அணிந்து கொண்டு நூதன மோசடியில் ஈடுபட போவதாக கங்காசாஹர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.. அதனால்தான் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.. ப்ளூடூத் செருப்பை விற்பனை செய்தது தொடர்பாக மதன் லால் மற்றும் திரிலோக்சந்த் என்ற 2 பேரையும் கைது செய்தனர்...

 முக்கிய புள்ளி

முக்கிய புள்ளி

ஆனாலும், இந்த செருப்பை விற்றதில் முக்கிய புள்ளி ஒருவருக்கு தொடர்புள்ளதாம்.. அவர் யார் என்று தெரியவில்லை.. அவர் இப்போது தலைமறைவாக உள்ளதால், போலீசார் தேடி வருகிறார்கள். இந்த செருப்பை பிரத்தியேகமாக தயார் செய்து, தங்கள் உறவினருக்கு அந்த முக்கிய புள்ளி விற்பனை செய்துள்ளர்.. அந்த உறவினர்மூலம்தான் 25 பேருக்கு செருப்புகள் ஆர்டர் தரப்பட்டு செய்யப்பட்டுள்ளன..

தொடர்பு

தொடர்பு

இதற்கு நடுவில், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக டவுஸா, ஜெய்ப்பூர் பகுதிகளில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ப்ளூடூத் செருப்பில் ஒரு காலிங் டிவைஸ் இருக்குமாம்.. அதிலிருந்து யாராவது ஒருவரை தொடர்பு கொள்ள முடியும்.. தேர்வில் வினாத்தாள் தரப்பட்டால், உடனே அந்த எண்ணில் தொடர்பில் உள்ளவருக்கு, அந்த வினாத்தாள் சென்றுவிடும்..

 விசாரணை

விசாரணை

அவர் அந்த முனையில் இருந்து, கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில்களை தெரிவிப்பார்.. அவர் சொல்லும் பதிலானது, தேர்வு எழுதும் நபரின் காதுக்குள் இருக்கும் சிறிய ப்ளூடூத் டிவைஸ் மூலம் கேட்கும்.. அந்த சாதனம் மிக சிறியதாக இருக்கும் என்பதால் நம் கண்களுக்கு தெரியாது.. இப்படி தொழில்நுட்பத்தை பயன்படுத்திதான் மோசடியில் ஈடுபட முயன்றனர்.. 5 பேர் சிக்கி கொண்டு விசாரணையின் பிடியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+