Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எப்படி திமிங்கலம்? தகனம் செய்யப்பட்ட நபர் உயிருடன் வந்த அதிசயம்! பெற்றோர் செய்த வித்தியாசமான சடங்கு

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உயிரிழந்துவிட்டதாக கருதப்பட்டு தகனம் செய்யப்பட்ட நபர் ஒருவர் மீண்டும் உயிருடன் வந்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த நபர் திரும்பவும் உயிருடன் வரும் சம்பவங்களை சினிமாக்களில்தான் பார்த்திருப்போம். ஆனால் அப்படி நிஜமாகவே ஒரு சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அதாவது இம்மாநிலத்தின் உதம் சிங் நகர் பகுதியை ஒட்டியுள்ள கிராமம் ஒன்றில் 42 வயதான 'நவீன் சந்திர பட்' எனும் நபர் கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவியுடன் வசித்து வந்திருக்கிறார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

Relatives remarry wife of presumed dead man in Uttarakhand after he comes back to life

இதனையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கடன் தொல்லை காரணமாக தலைமறைவானாரா? வேறு பெண்கள் யாருடனும் தொடர்பு, கொலையா? கடத்தலா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் நவீனுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்பதும், தனிப்பட்ட வாழ்வில் மனைவி குழந்தைகள் மீது அன்பாக இருந்திருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. அப்படி இருந்தும் இவர் எப்படி காணாமல் போனார்? என தெரியவில்லை. கடைசிவரை இவரை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறியது.

இப்படி இருக்கையில் இவர் காணாமல் போன ஒரிரு மாதங்களில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்றை ஊர் மக்கள் கண்டெடுத்தனர். நவீன் காணாமல் போனபோது என்ன கலரில் உடை அணிந்திருந்தாரோ அதே நிறத்தில் அடையாளம் தெரிய சடலத்தின் உடையும் இருந்தது. எனவே இது காணாமல் போன நவீன்தான் என நினைத்து அரவது உறவினர்கள் அந்த உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி தகணம் செய்தனர்.

இந்த சம்பவம் நடந்து ஏறத்தாழ ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், ஒரு வாரத்திற்கு முன்னர் உள்ளூர் மக்கள் சிலர் நவீனை பார்த்ததாக அவரது குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். இது வெறும் புரளியாக இருக்கலாம், அல்லது இறந்துபோனவரின் ஆன்மாவாக இருக்கலாம் என்று நவீனின் குடும்பத்தினர் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஊர் மக்களில் ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் இதை புரளி என்றே நம்பியிருந்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திடீரென நவீன் தனது வீட்டிற்கு வந்திருக்கிறார்.

பெற்றோர், மனைவி, உறவினர்கள் என யாராலும் இதை நம்ப முடியவில்லை. இறந்தவர் எப்படி மீண்டும் உயிருடன் வருவார்? அவரது உடலை நாங்கள்தானே தகனம் செய்தோம் என ஏராளமான கேள்வி இவர்கள் அனைவரின் மனதிலும் எழுந்தது. இருப்பினும் நவீனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அவருக்கு சில சடங்குகள் செய்யப்பட்டன. இது குறித்து உறவினர்கள் கூறுகையில்,

"எங்கள் கிராமத்தை பொறுத்தவரை இறந்துபோனதாக கருதப்பட்ட ஒருவர் உயிருடன் வந்தால் அவர் மீண்டும் பிறந்துள்ளதாக அர்த்தம். எனவே பிறந்த குழந்தைக்கு எந்த மாதிரியான சடங்குகள் செய்யப்படுமோ அதை நாங்கள் மீண்டும் செய்வோம். அதாவது அவருக்கு புதிய பெயரை சூட்டி மீண்டும் திருமணம் செய்து வைப்போம்" என்று கூறியுள்ளனர்.

அவர்கள் சொன்னது போலவே நவினின் பெயர், நாராயணன் பட் என மாற்றப்பட்டிருக்கிறது. இவரது மனைவியை இவருக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் உத்தரகாண்ட் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் கடைசி வரை அவர் ஏன் காணாமல் போனார் என்பது தெரியவே இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+