இணைய உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை: அமெரிக்காவை முந்தப் போகிறது இந்தியா...
டெல்லி: இந்தியாவில் இணையத்தள பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தால், இணையத்தை பயன்படுத்துவர்கள் எண்ணிக்கையில் விரைவில் அமெரிக்காவை இந்தியா முந்திச் செல்லும் என எதிர்பார்க்கப் படுகிறது.
உள்ளங்கையில் உலகம் என்பதை சாத்தியமாக்கி வருகிறது இணையம். அதிலும் தற்போது பெரும்பாலான அரசுப் பணிகள் கூட இணையத்தின் மூலமாகவே சாத்தியமாகி விடுவதால் கிராமத்தவர்களும் இணையத்தை பயன் படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அதனடிப்படையில், சமீபத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் இந்திய இணையதளம் மற்றும் மொபைல் சங்கம்(ஐஏஎம்ஏஐ) வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, இந்தியாவில் இணைய உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

உயரும் எண்ணிக்கை...
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் கடந்த ஜூன் மாதக் காலாண்டு அறிக்கையின்படி 198.30 மில்லியன் மக்கள் இணையதளம் உபயோகிப்பாளர்களாக இருக்கின்றனர்.இது முந்தைய காலாண்டைவிட 20 சதவிகித அதிகரிப்பாகும்.

அமெரிக்காவை முந்தும்....
இணைய உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை இதே விகிதத்தில் வளர்ச்சி நிலைமை இருந்தால் 260 மில்லியன் பயன்படுத்துபவர்கள் கொண்ட அமெரிக்காவை இந்தியா விரைவில் முந்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகரிக்கும் எண்ணிக்கை....
சென்ற அக்டோபர் இறுதியில் 68 மில்லியன் என்ற இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் 72 மில்லியனாக மாறும் வாய்ப்பிருப்பதாக இந்திய இணையதளம் மற்றும் மொபைல் சங்கம்(ஐஏஎம்ஏஐ) தெரிவித்துள்ளது.

மொபைல் இண்டர்நெட்....
மேலும், மொபைல் தொலைபேசி மூலம் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களே இங்கு அதிகமிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிராமங்களிலும் இணைய உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சமூக வலை தளங்கள்....
90 சதவிகிதம் அலுவலக வேலைக்காக மொபைல் இணையதளங்களைப் பயன்படுத்தும் அமெரிக்க மக்களைப் போலில்லாமல் இந்தியாவில் சமூக மற்றும் வலைத்தொடர்புடைய இணையதளப் பயன்பாடுகளே அதிகம் காணப்படுகின்றனவாம்.

புதிய பயனர்கள்....
ஐஏஎம்ஏஐயின் தலைவரான சுபா ரேயின் கருத்துப்படி கூகுள் போன்ற இணையதள நிறுவனங்களுக்கு இந்தியாவில் பெரிய அளவிலான வளர்ச்சி விகிதங்கள் சாத்தியமாக உள்ளன. இத்தகைய நிறுவனங்கள் இணையதளத்தில் ஆர்வம் காட்டும் புதிய பயனர்களை எளிதாக அதிகரிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications