2ஜி வழக்கை கண்காணித்து வரும் சிபிஐ அதிகாரியை மாற்றியது சரியல்ல- சுப்ரீ்ம் கோர்ட்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை கண்காணித்து வந்த சிபிஐ அதிகாரி சந்தோஷ் ரஸ்தோகியை மாற்றியுள்ளது சரியான செயலாகத் தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் அதை சிபிஐ சரி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
ரஸ்தோகி டிஐஜி அந்தஸ்திலான அதிகாரி ஆவார். அவரது மாற்றம் குறித்த செய்தி மிகக் கடுமையானது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இதுகுறித்து நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் கூறுகையில், இதை சிபிஐ சரி செய்ய வேண்டும் என்று சிபிஐ வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டது.
2ஜி வழக்கை மேற்பார்வையிட்டு வந்தவர் ரஸ்தோகி. அவரை திடீரென சிபிஐ அப்பொறுப்பிலிருந்து மாற்றியுள்ளது. இதுகுறித்து சிபிஐஎல் என்ற என்ஜிஓ நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் நீதிபதிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
அப்போது, ரஸ்தோகியை 2ஜி வழக்குலிருந்து குற்றப் பிரிவுக்கு சிபிஐ மாற்றியுள்ளதாக பூஷன் குறிப்பிட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து விசாரணை அதிகாரிகளும், உச்சநீதிமன்ற அனுமதி இல்லாமல் மாற்றம் செய்யப்படக் கூடாது என்று கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதை மீறி சிபிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று பூஷன் வாதிட்டார்.
இதையடுத்து இது மிகவும சீரியஸான விஷயம். இப்படி நடந்திருந்தால் அதை உடனடியாக சிபிஐ சரி செய்ய வேண்டும் என்று சிபிஐ வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுக்கு நீதிபதிக் உத்தரவிட்டனர். மேலும் பூஷன் சொல்வது தொடர்பான அனைத்து ஆவணங்களையும், கோப்புகளையும் தாக்கல் செய்யுமாறும் சிபிஐக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தொடர்ந்து ரஸ்தோகி கோர்ட்டுக்கு வருவது வழக்கம். ஆனால் அவர் நேற்று வரவில்லை. இதைத்தான் பூஷன் சுட்டிக் காட்டி முறையிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications