மத கோட்பாட்டுக்கு மரியாதை.. முஸ்லிம்களுக்கு வட்டியில்லா வங்கி.. ரிசர்வ் வங்கி, மத்திய அரசு திட்டம்!
டெல்லி: வட்டி வாங்குவதும் வட்டிக்குக் கொடுப்பதும் பெரிய பாவம் என்று இஸ்லாம் கூறுகிறது. இதனால் வங்கிகளில் கடன் வாங்கும் இஸ்லாமியர்கள், அதற்கான வட்டியை கட்டும்போது, மத கோட்பாடுக்கு எதிரான செயலை செய்வதாக உள்ளுக்குள் புழுங்குகிறார்கள். எனவே அவர்கள் எண்ணத்திற்கு மதிப்பு கொடுத்தும், இஸ்லாமிய போதனையை மதித்தும், இஸ்லாமியர்களுக்காக வட்டியில்லா வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தி வருகிறது.
2015-16 ஆம் ஆண்டு அறிக்கையிலேயே ரிசர்வ் வங்கி இது குறித்து தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு ஜெட்டாவை தலைமையிடமாகக் கொண்ட இஸ்லாமிய மேம்பாட்டு வங்கி இந்தியாவில் தனது முதல் கிளையை அகமதாபாத்தில் தொடங்கவிருப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் அதற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையில் அம்முயற்சி கைவிடப்பட்டது.

இந்நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இஸ்லாமியர்களுக்கான வட்டியில்லா வங்கியைத் தொடங்குவது குறித்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மிகத் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
மேலும், நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளின் கீழ் இந்த வட்டியில்லா வங்கிச்சேவையைச் செயல்படுத்தவும் போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் ரகுராம் ராஜனின் பதவிக் காலம் வருகிற செப்டம்பர் மாதம் 4-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு, புதிய ஆளுநராக அதாவது, இந்திய ரிசர்வ் வங்கியின் 24-வது கவர்னராக பொறுப்பேற்க இருக்கிறார் 52 வயதான உர்ஜித் பட்டேல். இவரது வருகைக்கு பிறகு இஸ்லாமியர்களுக்கான வட்டியில்லாத வங்கி கடன் திட்டம் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications