ரிசார்ட் ஓனருடன் நெருக்கம்.. கணவர் படுகொலை.. சாக்கு மூட்டையில் கட்டி.. குழி தோண்டி புதைத்த மனைவி!
இடுக்கி: ரிசார்ட் ஓனருடன் ஏற்பட்ட நெருக்கம், கட்டின கணவனை கொன்று சாக்கு மூட்டைக்குள் கட்டி குழி தோண்டி புதைக்கும் அளவுக்கு போய்விட்டது!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கழுத்துக்குளமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதி ரிஜோஷ் - லிஜி. இவருக்கு வயது 29 ஆகிறது. 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

அங்குள்ள ஒரு ரிசார்ட்டில் ரிஜோஷ் வேலை பார்த்து வந்தார். அதற்காக ரிசார்ட்டுக்கு பக்கத்திலேயே வீடு எடுத்து வசித்து வந்தனர். அந்த நேரத்தில்தான் ரிசார்ட் ஓனருக்கும், லிஜிக்கும் பழக்கம் ஏற்பட்டு, நெருக்கமானது. வாசிம் அப்துல் காதர் என்பதுதான் ரிசார்ட் ஓனர் பெயர். வயசு 27 ஆகிறது!
இந்த நிலையில் போன 31-ம் தேதி முதல் ரிஜோஷை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். உடனே லிஜி, "திருச்சூரில் இருந்தும், கோழிக்கோட்டில் இருந்தும் எனக்கு அவர் போன் பண்ணி பேசினார். அதனால் யாரும் பயப்பட வேண்டாம், வேணும்ன்னா என் போனை செக் பண்ணி பாருங்க" என்று குடும்பத்தினரிடம் சொன்னார்.
ஆனால் லிஜியின் பேச்சை அவர்கள் நம்பாமல் திரும்பவும் போலீசுக்கு போனார்கள். அடுத்தடுத்து புகார்கள் லிஜியின் மீது வந்து கொண்டே இருந்ததால், விசாரணையும் ஆரம்பமானது. இதற்காக லிஜியிடம் விசாரிக்க வந்தபோது, ரிசார்ட் ஓனரையும் காணோம், லிஜியையும் காணோம். 2 வயது குழந்தையுடன் இவர்கள் இருவரும் மாயமாகவும் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்துதான், இவர்களது உறவை கண்டுபிடித்தனர். ரிசார்ட்டை சுற்றிலும் சோதனை நடத்தினர். அப்போது, ரிசார் அருகில் மழை நீர் சேகரிப்பு தொட்டி இருந்தது.
அதன்மேல் புதிதாக மண் போட்டு நிரப்பப்பட்டும் இருந்தது. புதிதாக சிமெண்ட் போடப்பட்டதால், சந்தேகம் அடைந்து, அந்த தொட்டியை தோண்டினார்கள். ஆதற்குள் ஒரு சாக்குமூட்டை கிடக்கவும், அதை பிரித்து பார்த்தனர். அதில்தான் ரிஜோஷ் சடலமாக கிடந்தார். ரிஜோஷுக்கு மதுவில் விஷத்தை கலந்து இந்த ஜோடி கொன்றுள்ளது தெரியவந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் இது சம்பந்தமான விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதனால், ரிசார்ட் ஓனரின் சகோதரர், நண்பர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த சமயத்தில் ஒரு வாஸ்அப் ஆடியோ சகோதரருக்கு வந்துள்ளது. ரிசார்ட் ஓனர்தான் அதை அனுப்பியிருந்தார். அதில், "ரிஜோஷ் கொலை வழக்கில் எனது சகோதரர், நண்பர்களுக்கு தொடர்பில்லை" என தெரிவித்துள்ளார். இந்த வாட்ஸ்அப் வந்த இடத்தை ஆய்வு செய்ததில், குமுளியில் சிக்னல் காட்டுகிறது. அதனால், ஒரு தனிப்படையை அமைத்து இந்த கள்ள ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications