சர்வதேச யோகா தின விழாவில் ஆயுர்வேத மருத்துவர் மாரடைப்பால் மரணம்!!
ஹைதராபாத்: சர்வதேச யோகா தினத்தையொட்டி கின்னஸ் சாதனைகள் களைகட்டும் நேரத்தில் ஹைதராபாத்தில் ஒரு சோகமும் நிகழ்ந்துள்ளது. ஹைதராபாத்தில் யோகா பயிற்சிகளின் போது 59 வயது ஆயுர்வேத மருத்துவர் வீர ரெட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதனையொட்டி நாடு முழுவதும் நேற்று டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஹைதராபாத்தில் எல்.பி. நகர் அருகே உள்ள சஹாரா எஸ்டேட்ஸ் கம்யூனிட்டி ஹாலிலும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டி யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயுர்வேத மருத்துவரான சி.ஹெச். வீர ரெட்டியும் பங்கேற்றார்.
அப்போது மூக்கின் வழியாக நீரை உள்ளே இழுத்து வாய் வழியாக வெளியேற்றும் "ஜலநேத்தி" முறையை வீர ரெட்டி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பால் அவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து சஹாரா எஸ்டேட் மூத்த குடிமக்கள் சங்கத்தின் தலைவர் மோகன் ராவ் கூறுகையில், வீரா ரெட்டி நிகழ்ச்சியை செய்து கொண்டிருந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக எல்.பி. நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர் என்றார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர்தான் வீர ரெட்டிக்கு மாரடைப்பால் இருதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் அவரை யோகா செய்ய வேண்டாம் என அறிவுறுத்தவில்லை. இதனால் அவர் தொடர்ந்து யோகா செய்து வைந்தார். இதுவே தற்போது விபரீதமாகவும் முடிவடைந்துவிட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications