ஒரே பதவி- ஒரே ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை!
ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி போராடிய முன்னாள் ராணுவ வீரர் கிஷன்கிரிவால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லி: முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த கோரி போராட்டம் நடத்தி வந்த முன்னாள் ராணுவ வீரர் கிஷான் கிரிவால் டெல்லி ஜந்தர் மந்தரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலின் போது, ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை அமல்படுத்துவோம் என மத்திய பாஜக அரசு உறுதியளித்தது. ஆனால் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களை முன்னாள் ராணுவ வீரர் கிஷான் கிரிவால் நடத்தி வந்தார்.
அண்மையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி இருந்தார். இதனிடையே டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னாள் ராணுவ வீரர் கிஷான் கிரிவால் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications