ஜீரோ டூ ஹீரோ! தெலுங்கானாவில் காங்கிரசை செதுக்கியவர்! முதல்வராகும் ரேவந்த் ரெட்டி..யார் இவர்? பின்னணி
ஐதராபாத்: தெலுங்கனாவின் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த நிலையில், அம்மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்க உள்ளார். ஏபிவிபியில் தனது பயணத்தை தொடங்கிய ரேவந்த் ரெட்டி பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்
ஆந்திராவில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கனா தனி மாநிலமாக உருவானது. அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சந்திரசேகர் ராவ் வெற்றி பெற்றார்.அதேபோல் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியே வென்றது. அந்த தேர்தலில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி 94 இடங்களில் வென்று அமோக ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி வெறும் 19 இடங்களில் மட்டுமே வென்றது.

ஜீரோவில் இருந்து ஹீரோவாக: காங்கிரஸ் கட்சி வெறும் 19 இடங்களில் மட்டுமே 2018 ஆம் ஆண்டு தேர்தலில் வென்றாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதாவது அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகளுக்கும் மேல் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை தெலுங்கானாவில் ஜீரோவில் இருந்து ஹீரோவாக மாற்றியவராக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரேவந்த் ரெட்டி பார்க்கப்படுகிறார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் தனது பயணத்தை ரேவந்த் ரெட்டி தொடங்கியிருக்கிறார். 2007 ஆம் ஆண்டு சுயேட்சை எம்.எல்.சியாக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். பின்னர் அக்கட்சியில் இருந்து 2017 ஆம் ஆண்டு ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
நல்ல ஆதரவு: கட்சியில் சேர்ந்த 4 ஆண்டுகளில் மாநில தலைவர் பொறுப்பும் அவரை தேடி வந்தது. அப்போது முதல் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த தீவிரமாக உழைத்தார். அதேவேளையில், ரேவந்த் ரெட்டி சர்வாதிகாரமாக செயல்படுவதாகவும் கட்சியினர் மத்தியில் பரவலாக குற்றம் சாட்டப்பட்ட்டது. அதுபோக தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே கட்சியில் முன்னுரிமை அளிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் களப்பணியில் ரேவந்த் ரெட்டி தீவிரம் காட்டினார். ஒருநாளில் 4 பொதுக்கூட்டங்களில் கூட கலந்து கொண்டு தீவிரமாக கட்சி பணியாற்றினார். ரேவந்த் ரெட்டியை மாநில தலைவராக அவரது இந்த கடின உழைப்பு உயர்த்தியது. ரேவந்த் ரெட்டிக்கு ராகுல் காந்தி போன்ற காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் மத்தியிலும் நல்ல ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது.
எதிர்ப்புகள்: எனினும், சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு அவருக்கு எதிராக கட்சிக்குள் கலக குரல் எழுந்தன. தெலுங்கானா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் உத்தம் குமார் ரெட்டி உள்ளிட்ட்ட சில கட்சியின் மூத்த தலைவர்களும் முதல்வர் ரேசில் இருப்பதாக சொல்லப்பட்டது. இருந்தாலும் முதல்வர் ரேசில் ரேவந்த் ரெட்டியே வெற்றி பெற்று இருக்கிறார். ரேவந்த் ரெட்டி கடந்த 2020 ஆம் ஆண்டு " டிரோனை' சட்ட விரோதமாக பயன்படுத்திய குற்றச்சாட்டினால் கைதும் செய்யப்பட்டார்.
அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானதாக சொல்லப்பட்ட கட்டிடத்தை சட்ட விரோதமாக படம் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் சேர் ந்த சில ஆண்டுகளில் மாநில தலைவர் தற்போது முதல்வர் பொறுப்பு வரை உயர்ந்து இருக்கும் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக கட்சிக்குள் எதிர்ப்புகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. உத்தம் குமார் ரெட்டி, ஜெயபிரகாஷ் ரெட்டி, ஹனுமந்த ராவ்,மது யாக்ஷி கவுட், ஷஷிதர் ரெட்டி, கீதா ரெட்டி ஆகியோருக்கும் ரேவந்த் ரெட்டிக்கு எதிரான கோஷ்டியில் இருப்பதாக கட்சி வட்டாரங்க்ள் சொல்கின்றனர்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications