திரிணாமுல் காங்கிரஸில் விழுந்த விரிசல்! மருமகன் அபிஷேக் பானர்ஜியால் மம்தாவிற்கு தலைவலி! அவசர ஆலோசனை
கொல்கத்தா: மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, அவரது மருமகன் அபிஷக் பானர்ஜி இடையே விரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் மூத்த தலைவர்களுடன் மம்தா பானர்ஜி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல் அமைச்சராக அந்த கட்சி தலைவர் மம்தா பானர்ஜி இருக்கிறார். கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை தோற்கடிக்க பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்களை பாஜக தன்வசப்படுத்தியது. இருப்பினும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் 211 இடங்களில் வென்று ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. மம்தா பானர்ஜி முதல் அமைச்சர் ஆனார்.

ஐ-பேக் நிறுவனம்
இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸின் தேர்தல் வியூக அமைப்பாளராக பிரசாந்த் கிஷோர், அவரது ஐ-பேக் நிறுவனம் செயல்பட்டது. இதையடுத்து பிரசாந்த் கிேஷாருக்கும், மம்தா பானர்ஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரசாந்த் கிேஷார் தன்னை முன்னிலைப்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டே இதற்கு காரணமாகும். இதையடுத்து பிரசாந்த் கிேஷார், மம்தா பானர்ஜியிடம் இருந்து விலகினார்.

மருமகனுடன் விரிசல்
இதன் தொடர்ச்சியாக கட்சி பணியாற்றி வரும் மருமகன் அபிஷேக் பானர்ஜியுடன், மம்தாவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. கோவாவில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பணிகளை மம்தா பானர்ஜியின் மருமகன் அபிேஷக் பானர்ஜி முன்னெடுத்து வருகிறார். கட்சியில் மம்தா பானர்ஜிக்கு அடுத்து உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரத்தை அபிேஷக் பானர்ஜி கொண்டுள்ளார். சமீபத்தில் மம்தா, அபிேஷக் இடையே விரிசல் ஏற்பட்டது. இருவரும் வெளியே காட்டாமல் கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தனர். இருவருக்குமான விரிசல் பகிரங்கமாக வெளியே தெரியவில்லை.

ஒருவருக்கு ஒரு பதவி பிரசாரம்
இந்நிலையில் தான் ஒருவருக்கு ஒரு பதவி என்பதை கட்சியில் பின்பற்ற மம்தா மருகன் அபிஷேக் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இது திரிணாமுல் கட்சியில் உள்ள பல மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் பல பதவிகளை தங்கம் வசம் கொண்டுள்ளனர். இந்த விவகாரம் பற்றி அறிந்த மம்தா, அபிேஷக் மீது மேலும் கோபமடைந்ததார்.

விரிசல் பகிரங்கமானது
இதை மம்தா சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்தினார். அதாவது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவாவில் பிரசாரம் மேற்கொள்வீர்களா என நிருபர்கள் கேட்டதற்கு, ‛‛யாரோ ஒருவர் அங்கு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நான் அங்கு செல்லமாட்டேன். பிற இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்'' என்றார். கோவாவில் மருமகன் அபிஷேக் பிரசாரத்தை முன்னெடுத்து வரும் நிலையில் அவர் பெயரை குறிப்பிடாமல் யாரோ ஒருவர் கூறியது இருவருக்கும் உள்ள விரிசலை பகிரங்கப்படுத்தும் வகையில் இருந்தது. இதன்மூலம் மம்தா-அபிேஷக் இடையேயான விரிசல் இன்னும் அகலமாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறினர்.

அவசர ஆலோசனை
இதற்கிடையே தான் மம்தா பானர்ஜி, மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் ஒரு நபருக்கு ஒரு பதவி எனும் அபிேஷக்கின் முன்னெடுப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் மம்தாவின் விசுவாசிகளாக உள்ள மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதன்படி கட்சியின் பொது செயலாளர் ஹக்கீம், தேசிய துணை தலைவர் சுப்ராதா பக்சி, அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் ஆகியோரும், மருமகன் அபி ஷேக் பானர்ஜியும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications