வன்முறை வெடித்த கிழக்கு டெல்லியில் 4வது நாளாக பதற்றம்.. ஊரடங்கு உத்தரவு அமல்- 14 பேர் கைது!
டெல்லி: வன்முறை வெடித்த டெல்லியின் கிழக்குப் பகுதியில் உள்ள திரிலோக்புரியில் 4வது நாளாக பதற்றம் நீடித்து வருகிறது. அங்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல்கள் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமையன்று தீபாவளி நாளில் நள்ளிரவில் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு இதைக் கட்டுப்படுத்தினர்.
ஆனாலும் மறுநாள் காலையில் இது பெரும் வன்முறையாக வெடித்தது. இரு பிரிவைச் சேர்ந்தவர்களும் கற்களை சரமாரியாக வீசித் தாக்கிக் கொண்டனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற மத்திய பாதுகாப்பு படையினர், இரு பிரிவினரிடையே அமைதி ஏற்படுத்த முயன்றனர். அப்போது நடைபெற்ற மோதலில் 20 போலீஸார் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த மோதலின்போது, அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

இதனால், திரிலோக்புரியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 3வது நாளாக நேற்றும் ஊரடங்கு அமலில் இருந்தது.
இந்த ஊரடங்கு உத்தரவால் அப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. ரூ.17 மதிப்புள்ள அரை லிட்டர் பாக்கெட் பால் ரூ. 60 வரை விற்பனையானது.

இதனிடையே அரசியல் ஆதாயத்துக்காக மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த வன்முறை நடைபெறுகிறது என்றும் திரிலோக்புரியில் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சுனில் குமார் வைத்யா நடத்திய கூட்டம்தான் இந்த வன்முறைக்குக் காரணம் என்றும் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications