கொல்கத்தாவில் பயங்கர மோதல்... பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மீது வழக்குப்பதிவு
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
42 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தில் 7 வது கட்ட தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே 6 கட்டத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, அந்த மாநிலத்தில் மீதமுள்ள 9 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது.

ஜாதவ்பூரில் அமித்ஷா கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கொல்கத்தாவில் நேற்று மாலை பிரமாண்ட பேரணி நடந்தது, அப்போது தொண்டர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
பாதி வழியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடிகளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, கல்வீச்சு சம்பவமும் நடந்தது. இதில், பலர் காயமடைந்தனர்.
மேலும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதனையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால், அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மாறி, மாறி பரஸ்பர புகார் அளித்தனர். இந்நிலையில் கலவரம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மீது 2 பிரிவுகளில் கீழ் கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications