டெரி நிர்வாக குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பாலியல் புகாரில் சிக்கிய பச்சௌரி
டெல்லி: பாலியல் புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல் ஆர்வலரான ஆர்.கே. பச்சௌரி எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தின்(டிஇஆர்ஐ) நிர்வாக குழு உறுப்பினர் பதவியை ராஜினமா செய்துள்ளார்.
எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தின்(டிஇஆர்ஐ) தலைவராக இருந்தவர் சுற்றுச்சூழல் ஆர்வலரான ஆர்.கே. பச்சௌரி. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டிஇஆர்ஐ நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் பச்சௌரி மீது பாலியல் புகார் அளித்தார். இதனால் காலவரையற்ற விடுப்பில் சென்ற பச்சௌரிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் பச்சௌரி மீது மேலும் ஒரு பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து பச்சௌரி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு டிஇஆர்ஐ நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் துணை தலைவர் பதவி உருவாக்கப்பட்டு அந்த பதவி பச்சௌரிக்கு அளிக்கப்பட்டது. மேலும் அவர் அந்நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே பச்சௌரி மீதான பாலியல் புகார் உண்மை என்பது துறை ரீதியான விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் பச்சௌரியை நிர்வாக குழு உறுப்பினர் பதவியில் இருந்து டிஇஆர்ஐ நிறுவனம் நீக்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பச்சௌரியோ தன்னை யாரும் நீக்கவில்லை நான் தான் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
டிஇஆர்ஐ நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினர் பதவிப்பொறுப்பு 31.03.3016 அன்றுடன் முடிந்துவிட்டது. அதனால் நான் என் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். பிற விஷயங்களில் கவனம் செலுத்த உள்ளேன் என்றார்.
கடந்த 18ம் தேதி டிஇஆர்ஐ குழு கூடி முக்கிய முடிவு எடுத்துள்ளது. அப்போது தான் பச்சௌரியை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியுடன் எக்சிகியூட்டிவ் துணை தலைவர் பதவிக்காலமும் முடிவடைந்துள்ளது என்று பச்சௌரி தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications