நடிகை ரோஜாவின் உயிருக்கு ஆபத்து: செல்வமணி
நடிகை ரோஜாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது கணவரும் இயக்குனருமான செல்வமணி கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் நகரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாத்திரை திரு விழா நடந்தது. இதில் தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா கலந்து கொண்டார்.
ஆரத்தி கொடுப்பதில் அவருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் யாரோ ஒருவர் ரோஜா கையில் கத்தியால் கிழித்தார். இதில் அவரது வலது கையில் காயம் ஏற்பட்டது. அதோடு அவரது ஆரத்தி பூஜை தட்டும் தள்ளி விடப்பட்டது.
இதைக் கண்டித்து ரோஜா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்த ரகளையில் அம்மன் வீதி உலா நடப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

கொடும்பாவி எரிப்பு
இந்நிலையில் ஜாத்திரை திருவிழாவில் மோதல் ஏற்பட ரோஜாவே காரணம். எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரி தெலுங்கு தேசம் கட்சியினர் நகரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது ரோஜாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

ஒய்.எஸ்.ஆர் கட்சியினர்
கோவில் விழாவில் ரோஜா அரசியலை புகுத்துகிறார் என்று தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம் சாட்டினர். ரோஜா கொடும்பாவி எரித்த தெலுங்கு தேசம் கட்சியினரை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் நேற்று நகரியில் பேரணி நடத்தினார்கள்.

எம்.எல்.ஏவுக்கு எதிர்ப்பு
ஆர்.டி.எம். தியேட்டரில் இருந்து புறப்பட்ட பேரணி அம்பேத்கார் சர்க்கிள் வரை நடந்தது. இறுதியில் தெலுங்குதேசம் முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணம்ம நாயுடு கொடும்பாவியை எரிக்க முயன்றனர். ஆனால் காவல் துறையினர் அதை தடுத்து விட்டனர்.

செல்வமணி அச்சம்
இந்த நிலையில் ரோஜா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று அவரது கணவரும், இயக்குனருமான செல்வமணி கவலை தெரிவித்துள்ளார்.
"ஜாத்திரை திருவிழாவில் முதல் ஆரத்தி வழங்கவில்லை என்பதற்காக ரோஜா போராட்டம் நடத்தவில்லை என்றார்.

ஆரத்தி தட்டை தட்டுவதா?
கடவுளுக்கு முதல் ஆரத்தி, 2 ஆவது ஆரத்தி என்று சொல்வது அர்த்தமற்றது. ரோஜா கடவுள் பக்தி உள்ளவர். அம்மனுக்காக விரதம் இருந்து உடலை வருத்திக்கு கொள்வார். அப்படிப்பட்டவரின் ஆரத்தி தட்டை தட்டி விட்டதால்தான் ஆவேசம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

கையை கத்தியால் வெட்டினர்
அவரது கையை கத்தியால் வெட்டியதை கூட அவர் கவலைப்படவில்லை. ஆனால் ஆரத்தி தட்டை தட்டி விட்டதுதான் அவரை கவலையடைய செய்து உள்ளது.

ரோஜா தைரியமானவள்
எனது மனைவி ரோஜா தைரியமானவள். இந்த சம்பவத்துக்கு பிறகு அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது என்று செல்வமணி தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications