ராட்வீலர் நாய்களால் வந்த சோதனை.. ‛வாக்கிங்’ போன 75 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி.. அய்யோ கடவுளே
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் காலையில் ‛வாக்கிங்' சென்ற 75 வயது பெண்ணை விரட்டி விரட்டி ராட்வீலர் நாய்கள் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் படுகாயமடைந்த அந்த பெண்ணுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் உயிருக்கு போராடி வரும் நிலையில் ராட்வீலர் நாய்களின் உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் கவுசல்யா தேவி (வயது 75). இவர் தினமும் காலையில் ‛வாக்கிங்' செல்வது வழக்கம். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் காலையில் கவுசல்யா தேவி வழக்கம்போல் ‛வாக்கிங்' சென்றார்.

இந்த சமயத்தில் முகமது ஜாயித் என்பவர் தான் வளர்க்கும் 2 ‛ராட்வீலர்' நாயை அழைத்து கொண்டு ‛வாக்கிங்' சென்றார். இந்த வேளையில் முகமது அழைத்து வந்த ராட்வீலர் நாய்களும் அவரது பிடியில் இருந்து தப்பியது. அதுமட்டுமின்றி வாக்கிங் சென்ற கவுசல்யா, தேவியை விரட்டி விரட்டி கடித்தது.
இதில் கவுசல்யா தேவி படுகாயமடைந்தார். இறுதியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள டூன் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்தனர்.
உடலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். இதையடுத்து அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. கவுசல்யா தேவியின் உடல்நலம் இன்னும் கூட சீராகவில்லை. மோசமான நிலையில் தான் உள்ளது. அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வுருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கவுசல்யா தேவியின் மகன் உமாங் நிர்வால் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ராட்வீலர் நாயின் உரிமையாளர் முகமது ஜாயித்தின் அலட்சியம் தான் கவுசல்யா தேவியை நாய் கடிக்க முக்கிய காரணம் என்று கூறினர். இதையடுத்து முகமது ஜாயித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே தான் கவுசல்யா தேவியை விரட்டி விரட்டி ராட்வீலர் நாய்கள் கடித்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
ராட்வீலர் நாயை எடுத்து கொண்டால் அது மிகவும் ஆக்ரோஷமாகவும், மூர்க்கத்தனம் கொண்டவையாகவும் இருக்கும். இந்த நாய் வளர்ப்பு பல நாடுகளில் தலை செய்யபப்ட்டுள்ளது. நம் நாட்டிலும் கடந்த ஆண்டு ராட்வீலர் உள்ளிட்ட நாய்கள் கடித்து சிலர் இறந்தனர். இதையடுத்து மத்திய அரசு ராட்வீலர், பிட்புல் டெரியர், டோசாஇனு, அமெரிக்கன் ஸ்டான்போர்ட்ஷைர் டெரியர், ஃபிலா பிரசிலியரோ, டோகோ அர்ஜண்டீனோ, அமெரிக்கன் புல்டாக், போஸ்பெல், கங்கல், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், காகேஷியன் ஷெப்பர்ட் நாய், தெற்கு ரஷ்ய ஷெப்பர்ட் இன நாய், டார்ஞாக், ஓநாய் வகை நாய்கள், மாஸ்கோ கார்ட் உள்பட 20க்கும் அதிகமான வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்து வளர்க்க தடை விதிக்கப்பட்டது.
மேலும் ஏற்கெனவே வளர்க்கப்பட்டு வரும் இவ்வகை நாய்கள் இனப்பெருக்கம் செய்யாதபடி கருத்தடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கலப்பின நாய்களின் வளர்ப்புக்கும் இது பொருந்தும். இதனை மாநில அரசுகள் கவனிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த உத்தரவு இன்னும் பல மாநிலங்களில் முறைப்படி செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் தான் டேராடூனினல் கவுசல்யா தேவியை ராட்வீலர் நாய்கள் கடித்து குதறி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications