அய்யோ.. அக்கவுண்டில் அநாமத்தாக வந்த 10 கோடி! ஒரே நொடியில் கோடீஸ்வரியான பெண்! உடனடியாக எடுத்த முடிவு
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவியின் வங்கி கணக்கில் திடீரென பத்து கோடி ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. வழக்கமாக ஆயிரக்கணக்கில் மட்டுமே பணம் வங்கி கணக்கில் இருக்கும் நிலையில் திடீரென இவ்வளவு பெரிய தொகை வந்திருப்பதை கண்டு அந்த குடும்பமே இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் எடுத்த முடிவு தான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மைன்புரி மாவட்டம் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு வசித்து வரும் சீதா என்ற பெண்ணின் வங்கிக் கணக்கில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீதாவுக்கு பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கிளையில் சேமிப்பு கணக்கு உள்ளது. வழக்கம்போல் அவரது மகன் அருண் குமார் ஏடிஎம் மையத்துக்கு சென்று பின் எண்ணைப் போட்டு, கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்க்க முயன்றுள்ளார்.

அப்போது திரையில் தெரிந்த தொகையை பார்த்ததும் அவர் நம்ப முடியாமல் சில நொடிகள் அதிர்ச்சியில் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில், அந்த கணக்கில் ரூ.9,99,49,586 இருப்பதாக திரையில் காட்டியது. சாதாரணமாக விவசாயத்தை நம்பி வாழும் அந்த குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய தொகை இருப்பது எப்படி என்று புரியாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
"நான் ஏடிஎம் சென்று இருப்புத் தொகையை பார்த்தேன். அப்போது சுமார் 9 கோடிக்கும் மேல் இருப்பதாக திரையில் காட்டியது. இது யாருடைய பணம் என்று எங்களுக்கு தெரியவில்லை. வங்கி திறந்ததும் நேரில் சென்று விசாரிக்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் அருண்.
இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள சீதா "எங்கள் கணக்கில் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. இந்த பணம் யாருடையதோ அவர்கள் வந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எங்களுக்கு இதிலே எந்த உரிமையும் இல்லை" என்று அவர் கூறியுள்ளார். அதேபோல், அவரது கணவர் பார்ஜான் கூறும் போது, "நாங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் குடும்பம். இவ்வளவு பெரிய தொகைக்கு எங்களுக்கு சம்பந்தமே இல்லை. வங்கி திறந்ததும் சென்று இதை பற்றி தெரிவித்து, தேவையான நடவடிக்கை எடுக்க சொல்லப் போகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- விசிலுக்கு ஓட்டு போடுங்க.. பெண்கள் பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு
- 2 இட்லி சாப்பிடவும் டெல்லி அனுமதி வேண்டுமா? தேசிய கட்சிகளின் பரிதாபம்! அப்ப அடுத்த முதல்வர் இவர்தானா
- நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!
- ’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன?
- கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா?
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஏடிஎம் இயந்திரத்தில் இருப்புத் தொகை காட்டும் காட்சியை பதிவு செய்த அந்த வீடியோ பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதை பார்த்து வங்கி கணக்குகளில் இத்தகைய தவறுகள் எப்படி நடக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தான் இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளும் விளக்கம் அளித்துள்ளனர். வங்கி நிர்வாகம் கூறுகையில், இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட தவறாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக அந்த பெண்ணுக்கு ஏற்கனவே கடன் கணக்கும் இருந்ததால், கணினி பிழை காரணமாக இந்த தொகை தவறாக காட்டப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், வங்கி திறந்த உடனே சம்பந்தப்பட்டவர்கள் கிளைக்கு வந்து இருந்தால், இந்த பிரச்சினை உடனடியாக சரிசெய்யப்பட்டிருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கிக் ணக்கில் இவ்வளவு பெரிய தொகை வரவு வைக்கப்பட்டும், அந்த பணத்துக்கு ஆசைப்படாமல் வங்கி அதிகாரிகளே எடுத்துக் கொள்ளட்டும் என கூறிய விவசாயியின் குடும்பத்தை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
அசல் உயிலை தொலைத்த கோவை வங்கி.. கடனை தந்தும் கண்ணீர் வடித்த விவசாயி! ₹13 லட்சம் கோர்ட் தந்த தீர்ப்பு -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு













Click it and Unblock the Notifications