திமுகவை காப்பியடித்த ஆம் ஆத்மி.. மகளிருக்கு ரூ.1000 - சத்தீஸ்கரில் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி
ராய்பூர்: தமிழ்நாட்டைபோல் சத்தீஸ்கரில் மகளிருக்கு ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதியை வழங்கி இருக்கிறார்.
சத்தீஸ்கரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சி நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் இப்போதே அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. குறிப்பாக ஆளும் காங்கிரஸ், பாஜக மட்டுமின்றி இந்தியா கூட்டணியில் இடம்பெற்று உள்ள ஆம் ஆத்மியும் தனித்து களம் காண்கிறது.

இதற்காக கடந்த 5 மாதங்களில் 3 வது முறையாக ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் சத்தீஸ்கர் சென்று உள்ளார். அந்த வகையில் இன்று நடைபெற்ற ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கெஜ்ரிவால் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி இருக்கிறார். வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அவர் அளித்துள்ளார்.
வேலையில்லாத அனைவருக்கும் வேலை வழங்கப்படும், வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித் தொகை அளிக்கப்படும், வேலையில்லாத 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும், பணி நியமனத்தில் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அவர் அளித்து உள்ளார்.
அதேபோல், டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை போன்றே மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம், கிராமங்கள், நகரங்களுக்கு தடையின்றி 24 மணி நேரம் மின்சாரம், கடன் தள்ளுபடி அளிக்கப்படும், 18 வயதுக்கு அதிகமான மகளிருக்கு மாதம்தோறும் ஸ்ரீ சம்மன் ராஷி என்ற பெயரில் ரூ.1000 வழங்கப்படும் என அவர் அறிவித்து இருக்கிறார்.
சத்தீஸ்கரின் அனைத்து குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்படும், டெல்லியில் உள்ள பள்ளிகளை போல் அனைத்து பள்ளிகளும் தரம் உயர்த்தப்படும், டெல்லியை போன்று தனியார் பள்ளிகளால் சுயமான கல்விக் கட்டணத்தை உயர்த்த முடியாது. ஒப்பந்த ஆசிரியர்களுக்கு பணி உறுதி செய்யப்படும், ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். கல்வி கற்பித்தலை தவிர வேறு எந்த பணியும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படாது என்றார்.
டெல்லியை போல் சத்தீஸ்கர் மக்களுக்கு இலவச, நல்ல மருத்துவ வசதி அளிக்கப்படும், டெல்லியைபோல் அனைத்து மருந்துகள், மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக அளிக்கப்படும், முஹல்லா கிளீனுக்குகள் அனைத்து கிராமங்கள் மற்றும் வார்டுகளில் அமைக்கப்படும், அனைத்து அரசு மருத்துவமனைகளும் தரம் உயர்த்தப்படும், விபத்தில் சிக்கிய நோயாளிகளுக்கு முழு இலவச வைத்தியம் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
முதியவர்கள் இலவசமாக யாத்திரைக்கு அழைத்து செல்லப்படுவார்கள், அவர்கள் பயணிக்கவும், தங்கவும், உண்ணவும் இலவசம் என அவர் அறிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊழல் முற்றிலுமாக துடைத்து எரியப்படும். அரசு அதிகாரிகள் உங்கள் வீடு தேடி வந்து சேவை செய்வார்கள். யாருக்கும் லஞ்சம் கொடுக்க தேவை இல்லை என அவர் உறுதியளித்து இருக்கிறார்.
பணியின்போது உயிரிழக்கும் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும். பணி நியமனங்கள், ஒப்பந்த தொழிலாளர் முறை போன்றவை முறைப்படுத்தப்பட்டும். ஒப்பந்த தொழிலாளர் முறை முழுமையாக நிறுத்தப்படும் எனவும் அர்விந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி வழங்கி இருக்கிறார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications