பயணிகளே இல்லாமல் புறப்பட்ட சிறப்பு ரயில்... ரயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் ரூ. 16 லட்சம் நஷ்டம்!
லக்னோ: ரயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் மும்பையில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் லக்னோவுக்கு பயணிகள் இன்றி காலியாக வந்து சேர்ந்தது. இதனால், ரயில்வேக்கு ரூ. 16 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 12ம் தேதி மாலை 4.20 மணிக்கு மும்பையில் இருந்து லக்னோவுக்கு லோக்மான்ய திலக் ஏசி சிறப்பு ரயில் இயக்கப் பட்டது. இந்த ரயிலில் முதல் வகுப்பு, ஏசி இரண்டாம் வகுப்பு, ஏசி மூன்றாம் வகுப்பு என மொத்தம் 900 படுக்கைகள் இருந்தது.

இந்த சிறப்பு ரயில் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகத் தான், அதன் டிக்கெட் விற்பனையை ரயில்வே துவங்கியது. அதாவது மதியம் 1 மணிக்கு டிக்கெட் விற்பனை துவக்கப் பட்டது. அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மதியம் இரண்டு மணியோடு டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடப்பட்டன.
இதனால், பயணிகளால் இந்த சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்ய இயலவில்லை. பயணிகளே இல்லாமல் இந்த ரயில் மும்பையில் இருந்து புறப்பட்டு லக்னோ சென்றடைந்தது. இதனால், ரயில்வேக்கு ரூ. 16 லட்சம் இழப்பு ஏற்பட்டது.
இந்த இழப்பிற்குக் காரணம் ரயில்வே ஊழியர்களின் அலட்சியம் தான் என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சிறப்பு ரயில் குறித்த விவரங்களை கம்யூட்டரில் முன்கூட்டியே ஊழியர்கள் பதிவேற்றம் செய்யவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications