பிரபல கன்னட நடிகர் மருமகனின் வீட்டில் ரூ.6.6 கோடி பணம், 32 கிலோ தங்கம் பறிமுதல்
சித்ரதுர்கா: கன்னட நடிகர் தொட்டண்ணாவின் மருமகனும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான வீரேந்திராவின் வீட்டில் இருந்து ரூ.6.6 கோடி ரொக்கம், 28 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் 4 கிலோ தங்க நகைகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பிரபல கன்னட நடிகர் தொட்டண்ணாவின் மருமகன் கே.சி. வீரேந்திரா. மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதள கட்சி நிர்வாகி . கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரேவில் உள்ள அவரின் புதிய சொகுசு பங்களாவில் ஐடி அதிகாரிகள் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
வீட்டின் ஒரு பகுதி கூட விடாமல் சோதனை நடத்தினர்.

ரூ. 6.60 கோடி ரொக்கம்
வீரேந்திரா வீட்டு பாத்ரூமில் உள்ள ரகசிய இடத்தில் ரூ. 6.60 கோடி ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ரூ.5.7 கோடி ரொக்கம் புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தது. ரூ. 90 லட்சம் அளவுக்கு 100 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளாக இருந்தது.

தங்கம்
சனிக்கிழமை நடத்திய சோதனையில் அதிகாரிகள் கிலோ கணக்கில் தங்கத்தை பறிமுதல் செய்தனர். வீரேந்திராவின் வீட்டில் இருந்து 28 கிலோ தங்கக் கட்டிகள், 4 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிரிக்கெட் பெட்டிங்
வீரேந்திரா கோவாவில் பல சூதாட்ட கிளப்புகளை நடத்தி வருகிறார். மேலும் கிரிக்கெட் பெட்டிங் வழக்கிலும் அவருக்கு தொடர்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெய்டு
வீரேந்திராவின் வீடு தவிர அவரது சகோதரர் கே.சி. நாகராஜ் மற்றும் திப்பேசாமி ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பணம் பதுக்கல் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications