‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ. 9,000 கோடி ஒதுக்கீடு
டெல்லி: பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் ரூ. 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரும் 2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. எனவே, அதற்குள்ளாக மகாத்மாவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியாவை நினைவாக்க மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கென கடந்த 2014ம் ஆண்டு மகாத்மாவின் பிறந்தநாளன்று தூய்மை இந்தியா என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை தூய்மையானதாக மாற்ற, மக்கள் திட்டமாக மாற்றி இதனை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு கட்டமாக புனித நதிகளுள் ஒன்றான கங்கையை தூய்மைப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், நாடு முழுவதும் அனைவருக்கும் கழிப்பறை என்ற திட்டமும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி. அதில், பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கென ரூ. 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் நிதி மட்டுமின்றி, பல தனியார் அமைப்புகளும் இந்தத் திட்டத்திற்கென நிதி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications