ரூ.2 லட்சம் பிரீமியத்தில்.. ரூ.25 லட்சம் இன்சூரன்ஸ் பாலிசி.. "நாமினி" கணவர் செய்த அல்டிமேட் பாருங்க
டேராடூன் : மனைவியின் பெயரில் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார் கணவர்.. நாமினியாக தன்னுடைய பெயரையும் இணைத்துள்ளார்.. கடைசியில் பாலிசி யாருக்கு போனது? நாகத்தை நம்பும் நயவஞ்சக கணவன்களின் எண்ணிக்கை பெருகி கொண்டே வருவது, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலம், ஜாஸ்பூர் உதய்சிங் நகர் பகுதியை சேர்ந்தவர் சுபம் செளத்ரி. இவரது மனைவி பெயர் சலோனி.. 12 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

ஆனால், தம்பதி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு இருந்துவந்தது.. ஒருகட்டத்தில் மனைவி மீது வெறுப்படைந்த சுபம் செளத்ரி, வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்ததாக தெரிகிறது. ஏற்கனவே வீட்டில் சண்டைகள் நடந்துவரும்நிலையில், செளத்ரியின் இந்த கள்ளக்காதல் விவகாரம் , சலோனிக்கு தெரிந்துவிடவும், மேலும் கொந்தளித்தார்.. இதனால், தினமும் குடும்பத்தில் பிரச்சனை வெடித்தவாறே இருந்தது..
ஒவ்வொருமுறை தகராறு ஏற்படும்போதெல்லாம், சலோனியை, செளத்ரி சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.. எனவே, இப்படிப்பட்ட கணவனே தனக்கு தேவையில்லை என்று முடிவு செய்த சலோனி, கணவரை டைவர்ஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார்.. இதைப்பற்றி தன்னுடைய பெற்றோரிடமும், சகோதரர் அஜித்சிங்கிடமும் விவாதித்திருக்கிறார். ஆனால், இன்னும் தெளிவான முடிவை சலோனி எடுக்கவில்லை..
இன்சூரன்ஸ்: இதனிடையே கடந்த மாதம் சௌத்ரி, சலோனியின் பெயரில் ரூ.25 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் ஒன்றை ஆரம்பித்தார்.. இதற்காக ரூ.2 லட்சம் ப்ரீமியம் தொகையும் கட்டினார்.. இந்த இன்சூரன்ஸுக்கு தன்னுடைய பெயரை நாமினியாகவும் சௌத்ரி சேர்த்துள்ளார்..
ஆனால், சில நாட்களுக்கு முன்பு சலோனி உயிரிழந்தார்... நன்றாக இருந்த சலோனி திடீரென உயிரிழந்தது, சலோனியின் குடும்பத்தினரை உலுக்கிவிட்டது. எனவே, சலோனியின் உயிரிழப்புக்கு, சௌத்ரிதான் காரணம் என்று குற்றம்சாட்டினார்கள்.. சலோனியின் சகோதரர் அஜித் சிங், போலீசிலும் இதுகுறித்து புகார் தந்தார்..
சலோனி: இந்த புகாரின் பேரில், போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.. அதற்குள் சலோனியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் போலீசாருக்கு கிடைத்துவிட்டது.. அந்த ரிப்போர்ட்டை பார்த்த போலீசார் மிரண்டே போய்விட்டார்கள். சலோனியின் உடம்பில் பாம்பு விஷம் இருந்ததாம்.
இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, ""சலோனி மரணம் தொடர்பாக முதலில் நாங்கள் சந்தேக மரணம் பிரிவில்தான் வழக்குப்பதிவு செய்தோம்.. போஸ்ட்மார்டடம் முடிவில்தான் இது கொலை என்பது உறுதியாகியிருக்கிறது..
விஷம்: இதையடுத்து, இதை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறோம். போஸ்ட் மார்ட்டம் முடிவில் சலோனியின் உடலில் பாம்பு விஷம் இருப்பது உறுதியாகியுள்ளது. இன்சூரன்ஸ் தொகைக்காக, சௌத்ரிதான், மனைவி சலோனியின் உடலில் பாம்பு விஷத்தை ஊசி மூலம் செலுத்தியதாக தெரிகிறது.. இப்போதைக்கு சலோனியின் உடல் உறுப்புகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது" என்றனர்.
இதே உத்தரகாண்ட் மாநிலத்தில், சில மாதங்களுக்கு முன்பு இதுபோலவே ஒரு சம்பவம் நடந்தது.. நைனிடால் மாவட்டம் ஹல்த்வானியைச் சேர்ந்தவர் மஹி ஆர்யா என்ற 28 வயது பெண், அங்கித் சவுகான் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.. புதிய ஆண் நண்பருடன் மஹி பழகுவது, சவுகானுக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
வேலைக்காரி: அதனால், கோபமடைந்த மஹி, புதிய காதலர் தீப், வீட்டு வேலைக்காரி உஷாதேவி, அவரது கணவர் ராமாவதார் போன்றோரை கூட்டு சேர்த்து கொண்டு, சவுகானை கொலை செய்ய முடிவெடுத்தார்.
ஒரு கொலையை எப்படி செய்வது என்பது, டிவி சீரியல்களை பார்த்து கற்று கொண்டாராம்.. அதேபோல, கொலை செய்ததுடன், தடயங்களை அழிப்பது எப்படி? கொலையிலிருந்து மாட்டிக் கொள்ளாமல் தப்பிப்பது எப்படி? என்பதையெல்லாம் யூடியூப் மூலம் பார்த்து கற்றுக் கொண்டாராம். இறுதியில், தன்னை உயிருக்குயிராக நேசித்த காதலரை, நல்ல பாம்பை விட்டு கடிக்க செய்துள்ளார். இதில் அங்கித் துடிதுடித்து இறந்துவிட்டார்..
அதிர்ச்சி: இதுதொடர்பாக நல்ல பாம்பை வாடகைக்கு கொடுத்த பாம்பாட்டி மட்டுமே போலீசார் சிக்கினார்.. கொலையாளிகள் எங்கே என்றே தெரியவில்லை.. தலைமறைவான 4 பேர் குறித்தும் துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும் போலீசார் அறிவித்திருந்தார்கள். இந்த வழக்கு கடந்த வருடம் மிகுந்த பரபரப்பை தந்திருந்தது. அதுபோலவே,
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் கபிசூர்யா நகர் பகுதியில் கடந்த வரும் இன்னொரு பாம்பு சம்பவம் நடந்தது.. அங்குள்ள ஆதிகான் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் பத்ரா - பசந்தி.. இவர்களுக்கு டெபாஸ்மிதா என்ற 2 வயதில் பெண் குழந்தை இருக்கிறாள். பசந்திக்கு 23 வயதாகிறது.. தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நாகப்பாம்பு: இதனால் கணேஷ், ஒரு பாம்பாட்டியை சந்தித்து, பூஜை செய்வதற்காக பாம்பு வேண்டும் என்று கூறி, கடுமையான விஷம் கொண்ட நாகப்பாம்பை வாங்கியிருக்கிறார்.. ஒரு பிளாஸ்டிக் ஜாடியில் நாகப்பாம்பை கொண்டு வந்து மனைவியும், மகளும் படுத்திருந்த அறைக்குள் விட்டுவிட்டு, இன்னொரு ரூமுக்குள் கணேஷ் சென்று தூங்கிவிட்டார். மறுநாள் காலை மனைவியும், மகளும் பாம்பு கடித்து பரிதாபமாக இறந்துகிடந்தனர். இறுதியில் கணேஷ் போலீசில் சிக்கினார்.
கேரளாவில் உத்ரா என்ற வாய் பேச முடியாத பெண்ணை பாம்பை ஏவி கொன்றார் கணவர் சூரஜ்.. உத்ராவின் சொத்துக்காக, தூங்கி கொண்டிருந்த பெண் மீது பாம்பை தூக்கி வீசியதில், வாய் பேச முடியாத உத்ராவால் அலறகூட முடியவில்லை.. 2 முறை பாம்பை ஏவி கொல்ல முயன்று 3வது முறையே உத்ராவின் உயிர் பிரிந்துள்ளது. இதற்காக 10 ஆயிரம் தந்து பாம்பை வாங்கியிருக்கிறார் சூரஜ்..
உத்ரா: பாம்பை ஏவி எப்படி கொல்வது என்று யூடியூப்பில் தேடியிருக்கிறார்.. அந்த கொடிய நாகம் கொத்தியதுமே உத்ராவின் உயிர் படுக்கையிலேயே பிரிந்துவிட்டது. நாளுக்கு நாள் பாம்புகளை ஏவி, மனைவிகளை கொல்லும் கொடியவர்கள் அதிகரித்தவண்ணம் உள்ளனர். அந்தவரிசையில் உத்தரவாண்ட்டில் இன்சூரன்ஸ் தொகை ரூ.25 லட்சத்துக்காக மனைவியை கணவர் பாம்பு விஷம் ஏற்றி கொன்றிருப்பது பெரும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications