மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பாராட்டு- நேரடியாக ஒளிபரப்பிய தூர்தர்ஷன்!

Subscribe to Oneindia Tamil

நாக்பூர்: பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் வெகுவாக புகழாரம் சூட்டி பாராட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் ரேஸ்ம்பக் மைதானத்தில் ஆர் எஸ்.எஸ் தொண்டர்கள் தசரா விழா கொண்டாடினர். இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து. கொண்டார்.

தூர்தர்ஷன் ஒளிபரப்பு

தூர்தர்ஷன் ஒளிபரப்பு

இந்த நிகழ்ச்சியை தூர்தர்ஷன் தொலைக்காட்சி முதல் முறையாக நேரடியாக ஒளிபரப்பு செய்தது. இந்த விழாவில் பேசிய மோகன் பகவத் பெசியதாவது:

வலுவாக வளர்ந்து வருகிறது..

வலுவாக வளர்ந்து வருகிறது..

தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், சர்வதேச உறவுகள் ஆகியவற்றில் குறுகிய காலத்தில் பிரதமர் நரேந்திரமோடி எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது. சர்வதேச அரங்கில் இந்தியா வலுவாக வளர்ந்து வருகிறது என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டு உள்ளது என்பதற்கு சாதகமான அடையாளங்கள் தெரிகிறது.

கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும்...

கொள்கைகளை நிறைவேற்ற வேண்டும்...

மக்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த அரசுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் வழங்க வேண்டும். அதன் சிறந்த கொள்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

புதிய உற்சாகம்

புதிய உற்சாகம்

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமரிக்க பயணம் நமக்கு சாதகமாக அடையாளங்களை காட்டுகிறது. இது நாட்டு மக்களை ஒரு புதிய உற்சாகத்திற்கு கொண்டு சென்று உள்ளது.

பெருமைப்படுகிறது..

பெருமைப்படுகிறது..

புதிய நம்பிக்கையின் வெளிச்சம் மக்கள் இதயங்களில் தோன்றி உள்ளது. அமெரிக்க பயணம் மற்றும் அமெரிக்க அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்காக நாடுமுழுவதும் பெருமைபடுகிறது.

இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+