தேசவிரோத சக்திகளின் புகலிடமாக டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகம்... சொல்வது ஆர்.எஸ்.எஸ்.
டெல்லி: தேசவிரோத சக்திகளின் புகலிடமாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் திகழ்வதாக ஆர்.எஸ்.எஸ். சாடியுள்ளது. இந்த விமர்சனத்துக்கு ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ஏடான 'பஞ்சன்யா'வில் எழுதப்பட்டுள்ள கட்டுரை:

ஒருங்கிணைந்த இந்தியாவை துண்டாட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் முன்னின்று செயல்படுகிறது. இங்குள்ள மாணவர்கள் சங்கம், முழுக்க முழுக்க நக்சல் அமைப்புடன் தொடர்புள்ளவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
2010ல் தண்டேவாடாவில் சிஆர்பிஎஃப் போலீசாரை நக்சல்கள் தாக்கி படுகொலை செய்ததை வெளிப்படையாகவே கொண்டாடிய மாணவர் சங்கம் இங்குதான் செயல்படுகிறது.
காஷ்மீரில் இருந்து ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேச துரோக நடவடிக்கைகளுக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் உடந்தையாக இருக்கிறது.
இவ்வாறு பஞ்சன்யாவில் எழுதப்பட்டுள்ளது.
கடும் கண்டனம்
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இந்த விமர்சனத்துக்கு டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத், காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி ஆகியோரும் இந்த விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பஞ்சன்யா மீது ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகம் அவதூறு வழக்கைத் தொடர வேண்டும் என்றும் திவாரி வலியுறுத்தியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications