ஆர்எஸ்எஸ் "எலிகள்" இல்லை.. இந்து தர்மத்தை காக்க வந்த "சிங்கம்".. ஜார்கண்ட் முதல்வருக்கு பாஜக பதிலடி
ராஞ்சி: ஜார்கண்டில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசிய ஹேமந்த் சோரன் ஆர்எஸ்எஸ் அமைப்பை எலிகளுடன் ஒப்பிட்டார். மேலும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மத நல்லிணக்கத்தைக் குலைக்க முயல்வதாகக் குற்றம் சாட்டினார். இதற்கிடையே இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சிங்கம் எனக் குறிப்பிட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் இப்போது ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. அங்கு ஹேமந்த் சோரன் முதல்வராக இருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் எனத் தெரிகிறது.

ஹேமந்த் சோரன்: இதனால் தேர்தலைக் குறிவைத்து அங்குக் கூட்டங்கள் நடந்து வருகிறது. அதன்படி ஆளும் ஜேஎம்எம் செயல் தலைவரும் ஜார்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் கடந்த புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பை மிகக் கடுமையாக விமர்சித்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பை எலிகளுடன் ஒப்பிட்ட அவர், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மாநிலத்தில் வாக்குகளைப் பெற மத நல்லிணக்கத்தைக் குலைக்க முயல்வதாகக் குற்றம் சாட்டினார்.
அசாம் முதல்வரும் ஜார்க்கண்ட் பாஜக பொறுப்பாளருமான ஹிமந்த் பிஸ்வா சர்மா பேச்சைச் சுட்டிக்காட்டிய சோரன், பாஜக இந்து மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கு இடையே முரண்பாடுகளை விதைக்கிறது என்று சாடினார். மேலும் அவர், "ஆர்எஸ்எஸ் எலிகள் போல் படையெடுத்து நம் மாநிலத்தை அழித்து வருகிறது. இதுபோன்ற சக்திகள் காய்ச்சிய சாராயம் போன்றவை. அவை உங்கள் கிராமத்தில் நுழைவதைக் கண்டால் விரட்டுங்கள்... அரசியல் ஆதாயங்களுக்காகத் தேர்தலுக்கு முன் வகுப்புவாத கலவரங்களையும் பதற்றத்தையும் உருவாக்க இவர்கள் விரும்புகிறார்கள்" என்று சரமாரியாக விமர்சித்தார்.
பாஜக பதிலடி: இதற்கிடையே ஹேமந்த் சோரனின் இந்த பேச்சுக்கு பாஜகவின் அமர் குமார் பௌரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "ஹேமந்த் சோரன் ஆர்எஸ்எஸ்-ஐ எலிகளுடன் ஒப்பிட்டுள்ளார். இது சனாதன தர்மத்தின் பெருமையை மீட்டெடுக்கப் பாடுபடும் இந்து சிங்கங்களுக்கு அவமானம். ஜார்ஜ் சோரஸை போலத் தான் சோரன் செயல்படுகிறார். அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக அவர் வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்" என்று கடுமையாக விமர்சித்தார்.
மக்கள்தொகை: தொடர்ந்து பேசிய அவர், "ஜார்கண்டில் மக்கள்தொகை மாற்றங்கள் ஏற்படவில்லை என்ற சோரன் சொல்கிறார். அதுவும் போக்னாதியில் இதுபோல எதுவுமே நடக்கவில்லை என்கிறார். கடந்த 1855ஆம் ஆண்டின் சந்தால் கிளர்ச்சியின் முக்கிய மையமாக இந்த பகுதி தான் இருந்தது. அங்கு 40,000 சந்தால் குடும்பங்கள் வாழ்ந்த நிலையில், கடைசியில் ஏழு பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். இதற்கு என்ன காரணம்.. அவர்கள் எங்கே காணாமல் போனார்கள்? மக்கள்தொகை மாற்றங்கள் எதுவும் இல்லை என்றால் இதை எப்படி விளக்குவார்?" என்று கேள்வி எழுப்பினார்.
ஜார்கண்ட் சட்டசபைத் தேர்தல்: ஜார்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 81 சீட்கள் உள்ளன. அதில் குறைந்தபட்சம் 41 சீட்களில் வெல்லும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும். கடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜேஎம்எம்- காங்கிரஸ் இணைந்து ஆட்சியைப் பிடித்தது. ஜார்கண்ட் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications