முஸ்லிம் பெண்கள்.. சர்ச்சையாக வாட்ஸ்அப் ஸ்டேடஸ் வைத்த ஆர்எஸ்எஸ் தொண்டர் அதிரடி கைது.. கர்நாடகாவில்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: முஸ்லிம் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த ஆர்எஸ்எஸ் தொண்டரால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியில் ஹிஜாப், புலால் உணவு தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. மேலும் கோவில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகள் கடைகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தான் சமீபத்தில் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில் தான் கர்நாடகாவில் முஸ்லிம் பெண்கள் பற்றி அவதூறான கருத்து பரப்பிய ஆர்எஸ்எஸ் தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது. அதுபற்றிய விபரம் வருமாறு:

RSS worker arrested for controversial WhatsApp status he says Muslim women are baby factory

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசூகூர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ தம்பாகே. இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் செயல்பட்டு வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். வலைதளங்களில் இந்துத்துவா தொடர்பான கருத்துகளை பதிவு செய்து வந்தார். அதோடு தனது வாட்ஸ்அப்பிலும் இந்துத்துவா தொடர்பான கருத்துகளை ஸ்டேட்டசாக வைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் தான் அவர் சமீபத்தில் வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் சர்ச்சையை கிளப்பியது. அதாவது ராஜூ தம்பாகே, முஸ்லிம் பெண்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் எனும் வகையில் அவதூறான கருத்தை வாட்ஸ்ப்பில் பதிவிட்டார். இந்த பதிவின் மூலம் முஸ்லிம் பெண்கள் அதிகளவில் குழந்தைகளை பெற்றெடுக்க பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற கருத்தை முன்வைத்திருந்தார். இதுதொடர்பான ஸ்கீரின்ஷாட் இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான் ராஜூ தம்பாகேவை கைது செய்ய வேண்டும் என பலரும் கூறினர். அதோடு இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இரவில் முஸ்லிம் மக்கள் லிங்கசூகூர் போலீஸ் நிலைத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் லிங்கசூகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜூ தம்பாகேவை கைது செய்தனர். மேலும் அங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+