சபரிமலை விமான நிலைய திட்டம்... ஆலோசனை வழங்க சர்வதேச நிறுவனத்துக்கு ஒப்புதல்!
சபரிமலையில் விமான நிலைய கட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்க அமெரிக்காவின் லூயிஸ் பெர்கர் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலையில் விமான நிலையம் கட்டுவதற்காக தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளை வழங்க சர்வதேச நிறுவனமான அமெரிக்காவின் லூயிஸ் பெர்கர் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மலை பகுதியில் உள்ளது. இங்கு நவம்பர் மற்றும் ஜனவரி இடையே 3 மாத இடைவெளியில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

அவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் விமான நிலையம் அமைக்க நீண்ட நாள்களாக கோரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி ஐயப்பன் கோயிலிருந்து 48 கி.மீ.தூரத்தில் உள்ள சேருவல்லி எஸ்டேட் பகுதியில் 2,263 ஏக்கரில் பசுமை விமான நிலையம் கட்ட மாநில அரசு கடந்த 2016-இல் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் விமான நிலையத்தை கட்ட தொழில்நுட்ப ரீதியாகவும், சுற்றுச்சூழல் குறித்த ஆய்வு மேற்கொள்ளவும், நிதிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கவும் சர்வதேச நிறுவனமான லூயிஸ் பெர்கருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதற்தான முடிவை இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்த முதல்வர் பினராயி விஜயன், இன்னும் 9 மாதங்களுக்குள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க அந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications