சபரிமலை, சனி ஷிங்கனாப்பூர் கோயில் பெண் போராளி திருப்தி தேசாய் கைது
Recommended Video

ஷீரடி: ஷீரடி சாய்பாபா கோயில் நூற்றாண்டு விழாவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு வாகனங்களை மறிக்க போவதாக அறிவித்த பெண் போராளி திருப்தி தேசாய் திடீரென கைது செய்யப்பட்டார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்ல அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளத்தில் தொடர் போராட்டங்கள் நடக்கின்றன.
இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 2 தினங்களுக்கு முன்னர் நடைதிறக்கப்பட்டது. அப்போது ஐயப்பன் கோயிலுக்கு செல்ல வந்த பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பெண்ணுரிமை போராளியான திருப்தி தேசாய் சபரிமலைக்கு சென்று பெண்களை தரிசனம் செய்ய வைப்பதில் தீவிரமாக உள்ளார்.
|
பிரதமர் மோடி
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மகராஷ்டிரா மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற சீரடி சாய்பாபா கோவில் நூற்றாண்டு விழாவில் நேற்று கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பில், பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்ன என்று திருப்தி தேசாய் அறிந்து கொள்ள விரும்பினார்.
|
பதில் வரவில்லை
இதற்காக அவர் ஷீரடிக்கு வந்த பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்கு அனுமதி தருமாறு அகமது நகர் மாவட்ட போலீஸ் எஸ்பிக்கு கடிதம் எழுதினார். அங்கிருந்து அவருக்கு பதில் வரவில்லை.

ஆதரவாளர்கள்
இதையடுத்து அவர் பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்களை தானும், தனது ஆதரவாளர்களும் மறிக்கப்போவதாக அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவர் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அதிரடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

அடிபணிய மாட்டேன்
அப்போது திருப்தி தேசாய் கூறுகையில் நான் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்க முயற்சித்தால், என்னை கொன்று விடப்போவதாக 200-க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் வந்துள்ளன. பேஸ்புக் சமூக வலைத்தளத்திலும் மிரட்டல்கள் வருகின்றன. இதற்கெல்லாம் நான் அடிபணிய மாட்டேன்.

சனி ஷிங்கனாப்பூர்
தீபாவளிப் பண்டிகை முடிந்ததும், நான் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முடிவு செய்துள்ளேன். என்னை யாராலும் தடுக்க முடியாது என்றார் அவர். பெண்கள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் கோயில்களில் அனுமதி பெற்று தருவதில் திருப்தி தேசாய் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சனிசிங்னாபூர் கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழைய 2016-ம் ஆண்டு கோர்ட்டு மூலம் அனுமதி பெற்றுத்தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications