சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கவே முடியாது... சுப்ரீம்கோர்ட்டில் கேரளா
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது என கேரள அரசு, உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் 41 நாட்கள் கடும் விரதம் இருந்து இருமுடியுடன் வரும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமே 18 படியேறி ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கபடுகின்றனர்.

கோயிலின் புனிதத்தை காக்கும் பொருட்டு, மாதவிடாய் ஏற்படும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனினும் பருவம் அடைவதற்கு முன், 10 வயது வரையிலும், மாதவிடாய் நின்றபின் 50 வயதுக்கு மேற்பட்டும் பெண்கள் சபரிமலைக்கு வர அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு மற்றும் 5 பெண் வழக்கறிஞர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி கடந்த 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனுவை கடந்த மாதம் 11ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ், ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு, 1,500 ஆண்டுகளாக அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்லவில்லை என்று நீங்கள் (கோவில் நிர்வாகம்) கூறுவதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? பெண்கள் கோவிலுக்குள் செல்வதை எந்த அடிப்படையில் தடுக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், வயது, பாலினம் மற்றும் சாதி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அரசியல் சட்டத்தின்படி பெண்கள் கோவிலுக்குள் செல்வதை தடுக்கும் அதிகாரம் இருந்தால் ஒழிய அவர்களை கோவிலுக்கு செல்லக்கூடாது என்று யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
தேவஸ்தான வாரியம் தடையை ஆதரித்து கடந்த அரைநூற்றாண்டுகளாக பெண்களை அனுமதிப்பதில்லை என்ற வழக்கம் இருந்து வருகிறது. என்று கூற அதற்கு நீதிபதி மிஸ்ரா, 1,500 ஆண்டுக்கு முன்பாக சபரிமலை கருவறையில் பெண்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்ட நீதிபதிகள்,
"மத அடிப்படையில் மட்டுமே பெண்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்க முடியும். மற்றபடி அனைவரும் கோயிலுக்கு செல்வதற்கு அரசமைப்பு சட்டம் வழி வகுத்துள்ளது. எனினும், பெண்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்பதை அரசு விளக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
தவிர கடந்த 1,500 ஆண்டுகளாக சபரிமலையில் பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறதா என்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என உத்தரவிட்டனர். மேலும் ஒரு வாரத்துக்குள் இதுதொடர்பாக கேரள அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
அத்துடன் இவ்வழக்கின் அடுத்த விசாரணையை வரும் பிப்ரவரி 8ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையடுத்து, கேரள அரசு சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ''வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளை மாற்ற முடியாது. எனவே, சபரி மலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது'' எனக் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications