102 எம்எல்ஏக்களின் ஆதரவா?.. கெலாட் சொல்வது சுத்த பொய்.. மல்லுக்கட்டும் சச்சின் பைலட்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனக்கு 102 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறுவது தவறு. 25 எம்எல்ஏக்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்று துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக அங்கு புயல் கிளம்பியுள்ளது. சச்சின் பைலட்டுக்கும் கெலாட்டுக்கும் இடையே இருந்த பனிப்போர் தற்போது வெட்ட வெளிச்சமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Sachin Pilot says Ashok Gehlots claim of 102 MLAs wrong

இந்த நிலையில் இன்று காலை ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அசோக் கெலாட்டுக்கு பெரும்பான்மை இல்லை என சச்சின் குற்றம்சாட்டியிருந்த நிலையில் தனக்கு 102 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து அசோக் பைலட் ஆஜ் தக் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில் அசோக் கெலாட்டிற்கு 102 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறுவது தவறு. 25 எம்எல்ஏக்கள் என்னுடன் இருக்கிறார்கள். நாங்கள் ஜெய்ப்பூர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றார் சச்சின் பைலட்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் கதவுகள் எப்போதும் சச்சின் பைலட்டிற்காக திறந்தே இருக்கும். அவர் எப்போது வேண்டுமானாலும் வந்து ஆலோசனை நடத்தலாம் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுரேஜ்வாலா திங்கள்கிழமை தெரிவித்தார்.

கடந்த 3 தினங்களாக பைலட்டுடன் சுரேஜ்வாலாவும் கே சி வேணுகோபாலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+