Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜஸ்தானில் இன்று சச்சின் பைலட் உண்ணாவிரதம்.. அசோக் கெலாட்டிற்கு கடும் எதிர்ப்பு.. பதறும் காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

போபால்: பாஜகவின் ஊழல் என்ற தலைப்பில் ராஜஸ்தானில் சச்சின் பைலட் இன்று உண்ணாவிரத போராட்டம் செய்ய உள்ளார். அவரின் இந்த உண்ணாவிரத போராட்டம் உட்கட்சி மோதலை உருவாக்கும் ஒன்று என்று காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ராஜஸ்தானில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கே
உட்கட்சி மோதல் உச்சம் பெற்றுள்ளது. சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் இடையிலான மோதல் அங்கே உச்சம் பெற்று உள்ளது.

Sachin Pilot tussle with Ashok Gehlot: The former to hold a hunger strike today in Rajasthan

சமீபத்தில் சச்சின் பைலட் அளித்த பேட்டி ஒன்றுதான் அசோக் கெலாட் - சச்சின் இடையே மோதல் ஏற்பட காரணம். அதன்படி, பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவிற்கு எதிராக இன்னும் ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அவரின் ஊழல் புகார்களை விசாரிக்கவில்லை. இதை பார்த்தால் ராஜஸ்தான் அரசு அங்கே பாஜகவுடன் டீலிங் செய்து உள்ளதோ என்று மக்கள் கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுவிடும், என்று புயலை கிளப்பி உள்ளார்.

ஏற்கனவே ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் - பாஜக முன்னாள் முதல்வர் வசுந்தரா இடையே நட்பு உள்ளது. அதனால்தான் பாஜகவுடன் அவ்வப்போது இணக்கமாக செல்கிறார் அசோக் கெலாட் என்ற புகார் உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது சச்சின் பைலட் இந்த புகாரை வைத்துள்ளார்.

அதோடு பாஜகவின் ஊழல் என்ற தலைப்பில் அவர் போராட்டமும் செய்ய உள்ளார். இன்று முழு நாள் உண்ணாவிரதத்தை சச்சின் பைலட் மேற்கொள்ள உள்ளார். அவர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை பாஜகவிற்கு எதிராக செய்தால் மறைமுகமாக அசோக் கெலாட்டை எதிர்க்கவே செய்கிறார் என்று கூறப்படுகிறது.

இதற்கான தேதியை சச்சின் பைலட் மிகவும் கவனமாக தேர்வு செய்துள்ளார். ஜாதிப் பாகுபாட்டுக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலரும், கெலாட் பிறந்த மாலி சமூகத்தைச் சேர்ந்தவருமான ஜோதிபா பூலேயின் பிறந்தநாள் ஏப்ரல் 11 ஆகும். அதே நாளில்தான் உண்ணாவிரதத்தை சச்சின் பைலட் மேற்கொள்கிறார். , கெலாட் பிறந்த மாலி சமூகத்தைச் சேர்ந்தவர்களை திரும்பி பார்க்க வைக்கும் விதமாக சச்சின் பைலட் இப்படி செயல்படுகிறார்.

இதை தற்போது காங்கிரஸ் கட்சி, கட்சி விரோத செயல் இது. இது மிக மிக தவறானது. அவர் கட்சிக்குள் பிரச்சனை என்றால் கட்சிக்குள் பேச வேண்டும். அதைவிட்டுவிட்டு வெளியே பேச கூடாது என்று காங்கிரஸ் ராஜஸ்தான் பொறுப்பாளர் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் இப்படி அரசியல் குழப்பம் ஏற்படுவது இது நான்காவது முறை. முதலில் அங்கு தேர்தலுக்கு பின் யார் முதல்வர் என்பதை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது ராகுல் இருவரிடமும் பேசி.. கடைசியில்.. அசோக் கெலாட் கையை தூக்கி அவரை முதல்வராக்கினார்.

அடுத்து மீண்டும் ஒன்றரை வருடத்தில் அங்கு உட்கட்சி மோதல் வந்த நிலையில், அசோக் கெலாட் தனது ஆதரவாளர்களுடன் தனியாக பேசி வந்தார். எங்கே மத்திய பிரதேசம் போல ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்று அஞ்சிய காங்கிரஸ், சச்சின் பைலட்டை அழைத்து அடுத்த முறை நீங்கள்தான் முதல்வர் என்று கூறி அவரை சமாதானம் செய்தது.

அப்போது சச்சின் பைலட் காங்கிரசில் இருந்தே விலகுவதாக இருந்தது. ஆனால் கடைசியில் பிரியங்கா காந்திதான் தலையிட்டு சச்சின் பைலட்டை சமாதானம் செய்தார். அதன்பின் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் சமயத்திலும் இதே பிரச்சனை வந்தது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் பதவி ஏற்பதாக இருந்தது.

அசோக் கெலாட் தலைவராகும் பட்சத்தில் சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்குத்தான் அசோக் கெலாட் முட்டுக்கட்டை போட்டார். காங்கிரஸ் கட்சியில் ஒரு தலைவருக்கு ஒரு பதவி என்ற விதி உள்ளது. இதை ராகுல் காந்தியும் நேற்று குறிப்பிட்டு பேசி இருந்தார். இதனால் கண்டிப்பாக அசோக் கெலாட் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அசோக் கெலாட்.. இரண்டு பதவியையும் நான் பார்க்கிறேன்.. இல்லையென்றால்.. என்னுடைய ஆள்தான் ராஜஸ்தான் முதல்வராக வேண்டும் என்று நிலைப்பாடு எடுத்தார்.

இதனால் அசோக் கெலாட் மீது காங்கிரஸ் டாப் தலைவர்கள் கடும் அப்செட் ஆனார்கள். அதோடு அசோக் கெலாட்டிற்கு காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பும் பறிபோனது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. ராஜஸ்தான் அரசியலில் சச்சின் பைலட் போராட்டத்தால் அடுத்த புயல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+